முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிக்பாஸ் தமிழ் சீசன் 8இல் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் இவர்கள் தான்..!! அட CWC-இல் இருந்து இவரா..?

Bigg Boss Tamil Season 8 is currently in full swing on Vijay TV.
12:55 PM Sep 07, 2024 IST | Chella
Advertisement

விஜய் டிவியில் நடைபெறவுள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 8-க்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்குகிறார். புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் கலவையான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசனில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

சில போட்டியாளர்கள் நிச்சயமாக சீசனில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல்கள் கசிந்தாலும், பலர் உறுதியாக உள்ளார்கள். இதில் ‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகர் அருண் மற்றும் தீபக் ஆகியோரும் உள்ளனர். மேலும், ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ தொடரில் நடித்த வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி ஆகியோர் பிக்பாஸில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன்களில் அடிக்கடி முன்னணி நடிகர், நடிகைகள் அல்லது இயக்குநர்கள் பங்கேற்கும் பழக்கமாக உள்ளது. இந்த சீசனில் நடிகர் பார்த்திபன் பெயர் அடிபடுகிறது. அவர் பிக்பாஸ் போட்டியாளராக நுழைவாரா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய வெங்கடேஷ், மாதம்பட்டி ரங்கராஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுவரை நிகழ்ச்சியில் பெற்ற வரவேற்பு, ரங்கராஜுக்கு பிக்பாஸ் வாய்ப்பு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியில், புதிய போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம்.

Read More : விமர்சனங்கள் எழுந்தவுடன் தப்பித்துக்கொள்ள ஊழியர்களை பலியாக்குவதா..? சீமான் கண்டனம்..!!

Tags :
பிக்பாஸ்விஜய் சேதுபதிவிஜய் டிவி
Advertisement
Next Article