முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’அடுத்து ஜெயிலுக்கு செல்லப்போகும் 3 திமுக அமைச்சர்கள் இவர்கள் தான்’..!! அண்ணாமலை உறுதி..!!

11:26 AM Jan 11, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக சம்பளம் வாங்குகிறார் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளர்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ’என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், சங்க காலத்தில் இருந்து இன்று வரை சிறப்பு பெற்றுள்ள பகுதி. இப்பகுதியை சேர, சோழ மன்னர்கள் ஆண்டுள்ளனர். இங்கு, 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதேஸ்வரன் மலை உள்ளது. குட்டி சூரத் என அழைக்கப்படும் பர்கூரில், 2,000 ஜவுளி கடைகள் உள்ளன. ஒரு எம்எல்ஏ-வை முதல்வராக்கியதும், முதல்வரை தோற்கடித்ததும் பர்கூர் சட்டசபை தொகுதி. 146-வது சட்டசபை தொகுதியாக இன்று ’என் மண் என் மக்கள்’ பயணத்தை மேற்கொள்கிறோம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பர்கூரில் மோடி அலை என்பதை உங்கள் முகங்களில் பார்க்கிறேன். தமிழக அரசியலில் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2014 முதல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மோடி உள்பட 76 அமைச்சர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் 35 அமைச்சர்கள் உள்ளனர். இதில், 11 அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு உள்ளது. பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, காலக்கெடுக்குள் தப்பிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவரது அமைச்சர், எம்எல்ஏ. பதவியும் போயுள்ளது. விரைவில் அவர் சிறை செல்வார். கடந்த ஆறு மாதமாக அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் உள்ளார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்கவில்லை. சிறையிலிருந்து செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக சம்பளம் வாங்குகிறார். அடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் மற்றொரு ஊழல் வழக்கில் பொன்முடி என 3 அமைச்சர்களும் சிறை செல்வது உறுதி” என கூறியுள்ளார்.

Tags :
அண்ணாமலைஊழல் வழக்குஎன் மண் என் மக்கள்கிருஷ்ணகிரி மாவட்டம்சிறிஅசிறைசெந்தில் பாலாஜிதிமுக அமைச்சர்கள்
Advertisement
Next Article