முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திமுகவின் இந்த 4 முதல்வர்களும் தமிழகத்தை ஆட்டிப்படைக்கின்றனர்!…இபிஎஸ் குற்றச்சாட்டு!

05:45 AM Apr 13, 2024 IST | Kokila
Advertisement

EPS: ஸ்டாலின், உதயநிதி, துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட நான்கு முதல்வர்கள் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாமக்கல் தொகுதியில் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? அதிகாரம் மையங்களாக 4 முதல்வர்கள் இருக்கிறார்கள். நாட்டுக்கு ஒரு முதல்வர்தான் தேவை. திமுகவைச் சேர்ந்த 4 முதல்வர்கள் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். உதயநிதி, துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட நான்கு முதல்வர்கள் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சிக் காலத்தையும் திமுக ஆட்சி காலத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. சட்டம் - ஒழுங்கு சீர் கெடுகிறதோ அந்த மாநிலம் பாதிக்கப்படும். பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதிமுக ஆட்சியில் 7 பாலியல் வன்கொடுமை வழக்குகள். 2 ஆண்டு திமுக ஆட்சியில் 52 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் லாரிகள் இங்கு உள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.

லாரி விலை, உதிரிபாக விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, தொழில் பாதிப்பு, திமுக ஆட்சியில் டீசல் விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றபடவில்லை. டீசல் விலை உயர்வால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். வாடகை உயர்வு பொருள் விலை உயர்வு விலைவாசி ஏற்றம். பொதுமக்கள் பாதிப்பு மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. 60 ரூபாய்க்கு விற்ற டீசல் 96 ரூபாயக்கு விற்கிறது. கட்டுமான பொருள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு டீசல் விலை தான் காரணம்.

கம்பி விலை உயர்வு மணல் எம் சாண்ட் விலை உயர்வால் கனவில் தான் வீடு கட்ட முடியும். கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுத்த திமுக அதனை நிறைவேற்றவில்லை.

தமிழகம் போதைப் பொருள் மாநிலமாக மாறிவிட்டது. ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை . வெளிநாட்டில் இருந்து போதைப் பொருள் கடத்திய ஜாபர் சாதிக்குடன் அப்பா ஸ்டாலின், மகன் உதயநிதியுடன் போட்டோ எடுத்துள்ளனர். அவர்களுக்கு என்ன தொடர்பு என நமக்கு தெரியாது. இந்த பகுதியில் மேனகா என்ற கவுன்சிலருக்கு சொந்தமான குடோனில் கள்ள மதுபானம் தயாரிக்கபட்டுள்ளது.

Readmore: திமுக வேட்பாளருக்கு ஆதரவாக‌ மாவட்ட ஆட்சியர்…! தேர்தல் அதிகாரி புகார் மீது நடவடிக்கை…!

Advertisement
Next Article