முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த 2 பேர்தான்!. இலங்கை தொடரில் புதிய பயிற்சியாளர் இருப்பார்!. ஜெய் ஷா அப்டேட்!.

These 2 people! There will be a new coach in the Sri Lanka series! Jai Shah Update!.
07:58 AM Jul 02, 2024 IST | Kokila
Advertisement

New Coach: ஜூலை-27 ம் தேதி நடைபெறும் இலங்கை தொடரில் இருந்து புதிய பயிற்சியாளர் இந்தியா அணியுடன் இணைவார்” என்று ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமைபயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் ட்ராவிடின் பதவி காலம் இந்த நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், அடுத்த பயிற்சியாளர் கம்பிர் தான் கிட்டதட்ட உறுதியான நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ எப்போது அறிவிப்பார்கள் என இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதை தொடர்ந்து இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ‘ஜெய்ஷா’ டெலிகிராப் பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்த சில முக்கிய அறிவிப்பை கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு இதே கேப்டன் தலைமையில் தோல்வியடையாமல் இறுதி போட்டி வரை வந்து அங்கு ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியதால் நாம் தோல்வி அடைந்தோம்.

ஆனால், இந்த முறை இன்னும் கடினமாக உழைத்து கோப்பையை வெல்ல சிறப்பாக விளையாடினோம். ரோஹித் முதல் விராட் வரை அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த உலகக்கோப்பையில் அனுபவம் நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தியிருக்கிறது” என கூறினார். அதனை தொடர்ந்து பேசிய ஜெய்ஷா பயிற்சியாளர் குறித்த ஒரு அப்டேட்டையும் கூறி இருந்தார்.

“இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் என இருவரும் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். CAC நேர்காணல் செய்து 2 பெயர்களை தேர்வு செய்துள்ளது. அதுவரை வரும் ஜூலை- 6ம் தேதி நடைபெற உள்ள ஜிம்பாப்வே சுற்று பயணத்தில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செல்கிறார், அதன்பின் ஜூலை-27 ம் தேதி இலங்கை தொடரில் இருந்து புதிய பயிற்சியாளர் இந்தியா அணியுடன் இணைவார்” என்று ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

Readmore: யூரோ 2024!. காலிறுதியில் பிரான்ஸ், போர்ச்சுகல் அணிகள் மோதல்!

Tags :
Jai Shah Updatenew coachSri Lanka series
Advertisement
Next Article