For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நோய்கிருமிகள் அதிகரிக்கும்..!! இதெல்லாம் கடுமையாக பாதிக்கப்படும்..!! எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

Shocking information has come out that the global temperature of underground water is increasing, so there is a risk of underground water also becoming undrinkable in the near future.
11:22 AM Aug 16, 2024 IST | Chella
நோய்கிருமிகள் அதிகரிக்கும்     இதெல்லாம் கடுமையாக பாதிக்கப்படும்     எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
Advertisement

உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும், அதனால் எதிர்காலத்தில் நிலத்தடி நீரும் குடிக்க முடியாததாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் நன்னீர் என்பது மிகவும் குறைந்த சதவீதமே உள்ளது.

Advertisement

பல நாடுகளிலும் ஆறு, ஏரிகளில் ஏற்படும் நீர் வறட்சி காரணமாக நிலத்தடி நீரை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஆனால், உலக வெப்பமயமாதல் காரணமாக மெல்ல நிலத்தடி நீரின் வெப்பநிலையும் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நிலத்தடி நீரின் வெப்பநிலை 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக நிலத்தடி நீர் அதிக வெப்பம் கொண்டதாக மாறும்போது நோய்கிருமிகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் நிலத்தடி நீரும் மனிதர்கள் குடிக்க இயலாததாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயம், உற்பத்தி ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : நம் வீட்டிற்கு இந்த பறவைகள் வந்தால் நல்ல சகுனமா..? கெட்டதா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement