For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மேலும் 4 நாட்களுக்கு பலத்த மழை இருக்காம்..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Thiruvananthapuram Meteorological Center has announced that rain will continue in Kerala for another 4 days.
04:27 PM Oct 15, 2024 IST | Chella
மேலும் 4 நாட்களுக்கு பலத்த மழை இருக்காம்     மக்களே பாதுகாப்பா இருங்க     வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை, 4 மாதங்களைத் தாண்டி தற்போதும் பெய்து வருகிறது. இந்தாண்டு தென்மாவட்டங்களை விட கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்பட வடமாவட்டங்களில் தான் மழைப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

Advertisement

மேலும், தொடர் மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல அணைகளும் நிரம்பி உள்ளன. இந்நிலையில், மேலும் 4 நாட்களுக்கு கேரளாவில் மழை நீடிக்கும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கும், நாளை இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும், 17ஆம் தேதி எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் உள்பட 9 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கும் இன்றும், நாளை ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர் உள்பட 6 மாவட்டங்களுக்கும், 17ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்பட 5 மாவட்டங்களுக்கும், 18ஆம் தேதி கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : BREAKING | கனமழை எதிரொலி..!! இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை..!!

Tags :
Advertisement