சற்றுமுன்...! அரசு பள்ளி வளாகத்தில் எந்த கடையும் இருக்க கூடாது...! உடனே அகற்ற உத்தரவு...
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி , நிதியுதவி பெறும் தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ( Snacks Shops ) , எழுதுபொருள் அங்காடிகள் ( Stationery Shops ) , போன்ற எந்த அங்காடிகளும் பள்ளி வளாகத்திற்குள் செயல்படக்கூடாது எனவும் செயல்பட்டால் உடன் அதனை அகற்றிட உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் கடிதத்தில்; கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி , நிதியுதவி பெறும் தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ( Snacks Shops ) , எழுதுபொருள் அங்காடிகள் ( Stationery Shops ) , போன்ற எந்த அங்காடிகளும் பள்ளி வளாகத்திற்குள் செயல்படக்கூடாது எனவும் செயல்பட்டால் உடன் அதனை அகற்றிட வேண்டும்.
மேலும் பள்ளிகளில் இது போன்ற அங்காடிகள் செயல்படுவதாக தெரியவந்தால் தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய பள்ளி , நிதியுதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.