For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வந்தாச்சு உத்தரவு...! இனி ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் செய்ய கூடாது…! அதிகாரிகளுக்கு பரந்த கடிதம்...

06:00 AM Nov 08, 2023 IST | 1newsnationuser2
வந்தாச்சு உத்தரவு     இனி ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் செய்ய கூடாது…  அதிகாரிகளுக்கு பரந்த கடிதம்
Advertisement

ஓய்வூதியப்பலன்களை அனுமதிப்பதில் தேவையான காரணமின்றி காலதாமதம் கூடாது என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; கல்வித் துறையிலிருந்து ஓய்வுப் பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்குவது காலதாமதாமகிறது என்றும் ஒருசில ஆசிரியர்களுக்கு இராண்டுக்கு வேளாக பொது வைப்பு நிதி முதிர்வு தொகைக்கான கருத்துரு சார்அலுவலங்களிலிருந்து அனுப்புவது காலதாமதம் ஆகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை வருங்காலககளில் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Advertisement

அதன் அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓவ்வூதியப் பணப்பயன்கள் கால தாமதமின்றி உடனுக்குடன் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றி தொய்வின்றி வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவமர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு சுற்றிக்கையாக அனுப்பி வைக்கப்படுகிறது.

அனைத்து ஆசிரியர் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் தெரிவித்துள்ளவாறு ஒருவர் ஓய்வு பெறும் நாளுக்கு ஆறுமாதத்திற்குள் பொது வைப்பு நிதி முதிர்வு தொகை உட்பட ஓய்வூதியக் கருத்துருவினை தயார் செய்து மாநிலக் கணக்காயருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற நாளுக்கு பின்னர் ஒருவார காலத்திற்குள் முறையாக அரசு புள்ளி விவர மைய ஆணைய அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதில் எந்தவித காலதாமதமும் செய்யக்கூடாது.

மாநிலக் கணக்காயர் அனுமதிக்க வேண்டிய இனங்கள் தவிர ஓய்வூதியப் பணயன்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வுப் பெற்ற ஒரு மாதக் காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும். மாநிலக் கணக்காயருக்கு ஓய்வு பெறும் ஆசிரியர் ஊழியரின் பணிப்பதிவேடுகள் அனுப்பி வைக்கும் முன்னர், உரிய பதிவுகள் அனைத்தும் விடுபடாமல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து சரிபார்த்து மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மாநிலக் கணக்காயரிடமிருந்து தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு கருத்துக்கள் திருப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக வாரிசு நியமனங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா ? என்பதை ஆராய்ந்து சரிபார்த்து மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறையில் இகால்வியாண்டில் மட்டும் 1892 ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளார்கள் என்ற விவரம் இடைக்கப் பெற்றுள்ளது. (விவரப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அதன்படி இவ்வாசிரியர்கள் அனைவருக்கும் முழுமையாக ஓய்வூதியக் கருத்துக்கள் அரசு விதிப்படி ஆறு மாத காலத்திற்குள் மேற்குறித்த நிபந்தனைகளின் அடிப்படையில் சரிபார்த்து மாநில கணக்காயர் அரசு புள்ளி விவர மைய அலுவலர் அவர்களுக்கு அணுப்பப்பட வேண்டும்.

இதில் தாமதம் ஏற்படின் அதன் விவரத்தினை இயக்ககத்திற்கு உடன் தெரிமிக்கப்பட வேண்டும். மேலும், நீதிமன்ற வழக்குகள்; நுறை சார் நடவடிக்கை தணிக்காகத் தடை மூகம் ஓய்வு பெற அனுமதி அளிக்கப்படாத ஆசிரியர்கள் / ஊழியர்கள் விவரம் ஏதேனும் இயக்ககத்திற்கு உடன் தெரிவிக்கப்பட வேண்டும். ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு மாநில கணக்காயர் அரசு புள்ளி விவா மைய அலுவணி அவர்களால் ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்ட பின்னரி பணப்பயன்கள் முழுவதும் வழங்க முடியாத நிலையிருப்பின் அது சார்ந்த விவரங்களும் உரிய காரணத்துடன் இயக்ககத்திற்கு அந்தந்த மாத இறுதியில் தெரிவிக்கப்பட வேண்டும்.

ஓய்வூதியதார்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்ட விவரம் சார்பாக உரிய பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலங்களுக்கு வருகை தரும்போது இவ்விவரங்கள் ஆய்வு செய்து சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement