உலகக்கோப்பை டி20 இந்திய அணியில் இடம் பெறுவாரா விராட் கோலி.? தேர்வு குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் ரன் மெஷினாக திகழ் பவர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடரில் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையை முறியடித்து நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் தனது 50-வது சதத்தை நிறைவு செய்தவர்.. மேலும் ஒரே உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் விராட் கோலி. 11 போட்டிகளில் விளையாடிய இவர் 765 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தென்னாப்பிரிக்கா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்திய அணி சமன் செய்து நாடு திரும்பி இருக்கிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்ற நிலையில் கேப் டவுன் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலிலும் இரண்டாம் இடம் வகிக்கிறது.
தற்போது அனைத்து நாடுகளின் கவனமும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையின் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தப் போட்டிகள் ஜூன் மாதம் நான்காம் தேதி தொடங்க இருக்கின்றன. இந்த உலகக்கோப்பை போட்டி அட்டவணையும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் டி20 அணியில் விராட் கோலி இடம் பெற மாட்டார் என பிசிசிஐக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022-ம் வருட டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டி20 அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் டி20 உலக கோப்பை விளையாட விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் விராட் கோலி நீண்ட நாட்கள் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். மேலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய t20 அணியும் தற்காலங்களில் சிறப்பாக விளையாடி வருவதால் விராட் கோலிக்கு உலக கோப்பை டி20 அணியில் இடம் இருக்காது என தேர்வு குழுவினர் கருதுவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.