For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’அடுத்த 5 ஆண்டுகளில் தான் ஆட்டமே இருக்கு’..!! AI தொழில்நுட்பம் குறித்து பில் கேட்ஸ் சொன்ன பரபரப்பு தகவல்..!!

04:35 PM Jan 17, 2024 IST | 1newsnationuser6
’அடுத்த 5 ஆண்டுகளில் தான் ஆட்டமே இருக்கு’     ai தொழில்நுட்பம் குறித்து பில் கேட்ஸ் சொன்ன பரபரப்பு தகவல்
Advertisement

ஏஐ துறை இப்போது உலகில் மிகப் பெரிய புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இதன் எதிர்காலம் குறித்து பெரும் பணக்காரரான பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

சர்வதேச அளவில் இப்போது புயலைக் கிளப்பிய தொழில்நுட்பம் என்றால் அது ஏஐ தொழில்நுட்பம் தான். குறிப்பாக, சாட் ஜிபிடி கிடைத்த வெற்றி மற்ற ஏஐ மாடல்களுக்கும் மிகப் பெரிய உந்துதலாக அமைந்தது. மற்ற ஏஐ மாடல்களிலும் முதலீடுகள் குவிய ஆரம்பித்துள்ளன. மருத்துவம், தொழில்நுட்பம், முதலீடு என பல்வேறு துறைகளிலும் புது புது ஏஐ மாடல்கள் வரத் தொடங்கின. அதேநேரம் இது வேலையிழப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு வேற லெவலில் வளர போகிறது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை. இதன் மூலம் நமக்குப் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்“ என்றார். வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தால் வளர்ந்த நாடுகளில் சுமார் 60% வேலைகள் காலியாகும். சர்வதேச அளவில் 40% வேலைகள் காலியாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலாக பில் கேட்ஸ் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார்.

இது குறித்து பில் கேட்ஸ் மேலும் கூறுகையில், "1900இல் விவசாய உற்பத்தியைத் தாண்டி எதுவும் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் இப்போது விவசாய வேலைகளைத் தாண்டி பல புதிய வேலைகள் உருவாக்கியுள்ளோம். இதனால் மக்கள் வாழ்க்கையும் மேம்பட்டே இருக்கிறது. இந்த ஏஐ அதுபோலத் தான் இருக்கும். இது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். பல்வேறு தரப்பினருக்கும் இது மிகப் பெரியளவில் உதவும். மக்களின் வாழ்க்கையை இது சுலபமாக்கும். இந்த ஏஐ கணினி போல இல்லை. அதை அணுக உங்களுக்கு பிரத்யேக கருவி எல்லாம் தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் கம்பியூட்டர் அல்லது மொபைலை இணையத்தில் கணெக்ட் செய்தாலே போதும். நம்மால் ஏஐ சாதனங்களை அணுக முடியும்" என்றார்.

Tags :
Advertisement