"அதுல ஒன்னும் இல்ல கீழ போட்டுருங்க"… தமிழக அரசின் பட்ஜெட் குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்.!
தமிழக அரசின் 2024 -25 ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மாணவர்கள் பெண்கள் குழந்தைகள் ஏழைகள் என அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அரசு பள்ளியில் கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு உதவி தொகை அறிவிக்கப்பட்டதை போல் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவை தவிர ஏழை மக்களுக்கு காங்கிரீட் வீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு தரும் தொழிற்சாலைகள் ஐடி பார்க்க என ஏராளமான திட்டங்களை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனத்தை முன் வைத்திருந்தார் . எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமான பட்ஜெட் இது என அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனும் தமிழக அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர் இன்று தமிழக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பட்ஜெட்டை வாசித்தார் என்பதை தவிர அதில் வேறு எதுவும் இல்லை. திட்டங்கள் எதுவும் இல்லாமல் வெறும் அறிவிப்புகளாகவே பட்ஜெட் இருக்கிறது என விமர்சித்து இருக்கிறார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் அடையாறு ஆற்றை சுத்தம் செய்வதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கலைஞர்காலத்தில் இருந்து இப்படித்தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த தீர்வும் கிடைத்ததாக தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார். வெறும் அறிவிப்புகள் தான் இந்த பட்ஜெட்டில் பெரிதும் இடம் பெற்று இருக்கிறது. அது பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை என விமர்சனம் செய்துள்ளார் வானதி சீனிவாசன்.
English Summary: TN Budget is full of offers only there is nothing special in it.Bjp legislative member vanathi Sreenivasan criticise the submitted budget.
Read More: https://m.1newsnation.com/article/vijay-tvk-party-the-target-is-to-add-2-crore-members-to-the-party-tamil-nadu-success-club-report/695767