மனைவியை பிரிந்ததில் துளியும் விருப்பம் இல்லை..!! பிற்காலத்தில் புரிந்து கொள்வார்..!! ஓபனாக பேசிய யேசுதாஸ்..!!
அண்மையில் விவாகரத்துக்காக மிகவும் அதிகமாக பேசப்பட்ட பிரபலம் என்றால் அது ஜெயம் ரவிதான். அதேபோல், நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தை அறிவித்தபோதும், இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் மற்றும் சைந்தவி விவாகரத்தை அறிவித்தபோதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. மேலும், திரைத்துறையில் யார் விவாகரத்து செய்தாலும் பலரும் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட நடிகரை மட்டுமே காரணமாகக் கூறி கிசுகிசுத்து வருவதை பார்க்க முடிகிறது.
ஆனால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் லிவிங்ஸ்டன் விவாகரத்து குறித்து பேசுகையில் மிகவும் தெளிவான பார்வையை பலருக்கு ஏற்படுத்தினார். அதாவது அவர் பேசுகையில், "ஒருவன் குடிப்பான், அடிப்பான் அவனோடு அந்த பெண் வாழ வேண்டுமா? அவனை விட்டுவிட்டு வேறு ஒருவனுடன் வாழலாமே? ஒருமுறை அடிபட்டு இருகாங்க, அடுத்த முறை தனது பார்ட்னரை சரியா தேர்வு செய்யனும்னு கவனமா இருப்பாங்க. இந்த சமூகம் வாழ்ந்தாலும் ஏசும்
உங்க சொந்த பந்தத்துல நீங்க நல்லா இருப்பது யாருக்காவது புடிக்கும்னு நெனச்சுட்டு இருக்கீங்களா? இப்போ ஒருவருக்கு விவாகரத்து நடைபெறுகின்றது அதனைத் தவறுனு சொல்லுவீங்களா? அதைத் தவறுனே சொல்ல முடியாது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார் என்பது யாருக்குத் தெரியும்? நீங்கள் குடும்பம், சொந்தம், மரியாதை இப்படி வாழ்ந்தீங்கனா, அது வாழ்க்கையில ஒரு பகுதிதான்" என பேசியிருந்தார்.
இந்நிலையில், பாடகர் விஜய் யேசுதாஸ் தனது விவாகரத்து குறித்து பேசுகையில், "நானும் எனது மனைவியும் பரஸ்பரமாக பேசி இந்த முடிவை எடுத்தோம். எங்களின் இந்த முடிவில் பெற்றோர்களுக்கு துளியும் விருப்பம் கிடையாது. மேலும், அவர்களுக்கு இது கஷ்டத்தைத்தான் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, எங்களது மகளுக்கு 15 வயது ஆகிறது. எங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை மகளால் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மகனுக்கு 9 வயது மட்டுமே ஆகிறது. மகனுக்கு இப்போது என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை என்றாலும் பிற்காலத்தில் புரிந்து கொள்வார் என நம்புகின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.