பணயக்கைதிகள் குறித்த பட்டியல் இல்லாமல் போர் நிறுத்தம் இல்லை!. பின்வாங்கிய பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!
Netanyahu: விடுவிக்கப்பட வேண்டிய பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிடும் வரை காசாவில் போர்நிறுத்தத்தின் கட்டமைப்பை இஸ்ரேலால் முன்னெடுக்க முடியாது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், 'போர் நிறுத்த ஒப்பந்தத்தின்' மூலம் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் நேற்று முன்தினம் அறிவித்தது. இருந்தாலும், பணைய கைதிகளை விடுவிப்பதில் இரண்டு நாடுகளுக்கும் இடையே இழுப்பறிகள் தொடர்ந்துக்கொண்டிருந்தன. இதுகுறித்து வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்பு சபை கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். இதுவரை நடந்த இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரில் பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலை சேர்ந்த சிலரை சிறைபிடித்து வைத்திருந்தனர். இஸ்ரேலும் பல பாலஸ்தீனர்களை சிறையில் அடைத்து வைத்திருந்தது. இந்த கூட்டத்தில், பணைய கைதிகளை விடுவிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாலஸ்தீனமும் அவர்கள் வைத்திருக்கும் பணைய கைதிகளை விடுவிப்பார்கள்.
இந்தநிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிடும் வரை காசாவில் போர்நிறுத்தத்தின் கட்டமைப்பை இஸ்ரேலால் முன்னெடுக்க முடியாது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒப்பந்தத்தை மீறுவதை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது. ஹமாஸ் மட்டுமே பொறுப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த வியாழன் அன்று இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கிட்டதட்ட 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கடைசி நிமிட தாக்குதலுக்கு பின், இதை காரணம் காட்டி இஸ்ரேல் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க முயன்றது. இந்த நிலையில், 'இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வருமா?' என்ற கேள்வி எழுந்துவரும் நிலையில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார் பிரதமர் நெதன்யாகு.