அபிஷேகம் கிடையாது.. பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அம்மன்.. இந்த அதிசய திருக்கோயில் எங்கு உள்ளது தெரியுமா..?
கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் அற்புதத் தலம் சமயபுரம். திருச்சிக்கு வடக்கில் - சமயபுரத்தின் கண்ணனூர் அருகில், பெருவளை வாய்க்கால் கரையில் மகாசக்தி தலமாகத் திகழ்கிறது, சமயபுரத்தாளின் ஆலயம். எந்த கோயில்களுக்கு சென்றாலும் கடவுளை வேண்டி பக்தர்கள் தான் விரதம் இருந்து வழிபட்டு வருவார்கள். ஆனால் இந்த கோயிலில் வித்தியாசமான நம்பிக்கை இருந்து வருகிறது.
அதாவது ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நலனிற்காகவும் அம்மன், 28 நாட்கள் வரை பட்டினி விரதம் இருக்கிறாள். இந்த விரத நாட்களில் அம்மனிற்கு நெய்வேத்தியம் படைக்கப்படாது. மேலும் ஆரஞ்சு, துள்ளு மாவு, இளநீர் பானகம், திராட்சை போன்றவை மட்டுமே நெய் வைத்தியமாக அம்மனுக்கு படைக்கப்படுகிறது.
இந்த திருத்தலத்தில் இருக்கும் அம்மனிடம் என்ன வேண்டினாலும் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவாள் என்று கூறி வருகின்றனர். வேண்டுதல் காணிக்கையாக மொட்டை அடித்தல், காது குத்துதல், தேர் இழுத்தல், அபிஷேகம் செய்வது, தீச்சட்டி எடுத்தல், தொட்டில் பிரார்த்தனை, ஆடு, மாடு, கோழி, தானியங்கள், சாப்பாடு போன்றவற்றை தானமாக வழங்குவது போன்றவற்றை பக்தர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் நம் உடலில் ஏற்படும் நோய்கள், கண், காது, மூக்கு, கை, கால் போன்ற உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்கள் அந்த உறுப்புகளின் உருவகத்தை காணிக்கையாக வழங்கி வேண்டிக் கொண்டால் உடல் உறுப்புகளில் உள்ள நோய்கள் விரைவில் குணமாகும். குழந்தை இல்லாதவர்கள் தொட்டிலை காணிக்கையாக செலுத்துவதன் மூலம் விரைவிலேயே குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு அதிசயம் பல செய்யும் திருகோயிலாக இந்த அம்மன் கோயில் இருந்து வருகிறது.
சமயபுரத்தாளுக்கு அபிஷேகம் கிடையாது ஏன் தெரியுமா?
சமயபுரம் மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு. சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம். அம்பிகை எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், கருவறையைச் சுற்றிலும் எப்போதும் நீர் சூழ்ந்திருக்கும்படி செய்திருக்கிறார்கள். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
Read more ; அம்மா.. இந்த இடத்துல வலிக்குது.. ரத்தம் சொட்ட சொட்ட கதறிய சிறுமி..!! உத்தரப்பிரதேசத்தில் பகீர்!