வாகன ஓட்டிகளே..!! செம குட் நியூஸ் காத்திருக்கு..!! விரைவில் மத்திய அரசு வெளியிடப் போகும் சூப்பர் அறிவிப்பு..!!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், வரும் தீபாவளிக்குள் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு (OMCs) வரம்பு அதிகரிப்பதன் மூலம் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை கச்சா எண்ணெய் விலையில் உயர்வு ஏற்படவில்லை. இந்த நிலைத்தன்மை இப்படியே நீடித்தால் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் 3 வரை குறைக்க அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் கச்சா எண்ணெய் விலை நிலையானதாக இருந்தால், சில்லறை எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக உற்பத்தியால், கடந்த சில மாதங்களாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதியில் உள்ளனர்.
Read More : சிவாஜிக்கு மகளாகவும், மனைவியாகவும் நடித்து பெருமை சேர்த்தவர்..!! ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த பிரபல நடிகை..!!