For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அயோத்தியின் உருமாற்றத்திற்கு பின்னால் இருக்கும் நபர்..! சுற்றுலா, தொழில்துறையில் அயோத்தி வளர்ச்சி பெறும்!…

08:57 AM Jan 14, 2024 IST | 1newsnationuser3
அயோத்தியின் உருமாற்றத்திற்கு பின்னால் இருக்கும் நபர்    சுற்றுலா  தொழில்துறையில் அயோத்தி வளர்ச்சி பெறும் …
Advertisement

சுற்றுலா, தொழில்துறையில் அயோத்தி வளர்ச்சி பெற எங்களிடம் மாஸ்டர் பிளான் ஒன்று உள்ளது என்று மாவட்ட கமிஷ்னர் கௌரவ் தயாள் தெரிவித்துள்ளார்.

Advertisement

உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்காக அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சியளிக்கிறது. பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கும்பாபிஷேகத்தன்று பொதுமக்கள் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி வழிபடவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரதமர் 11 நாட்கள் சிறப்பு பூஜை செய்து வருகிறார்.

மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவிற்காக அயோத்தி நகரம் முழுவதும் பலத்த கண்காப்பில் உள்ளது. சிசிடிவி கேமராக்கள், ஆங்காங்கே காவல்துறையினர், ட்ரோன்கள் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் உலகமே உற்று பார்க்கும் வகையில் அயோத்தி வளர்ச்சி கண்டுள்ளது. பிரான் பிரதிஸ்தா" விழாவிற்கு முன்னதாக, ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அயோத்தி கமிஷனர் கௌரவ் தயாள், சுற்றுலா மற்றும் தொழில்துறையில் நகரம் ஏற்றம் பெறும் என்று கூறினார். "அயோத்தி அபரிமிதமாக வளர்ச்சி பெறும் என்றும் உலகமே அயோத்தி நகரத்தை உற்று நோக்கியுள்ளது. இது சுற்றுலாத் துறைக்கு ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது என்று கூறினார்.

அயோத்தியில் ஏராளமான ஹோட்டல்கள் உருவாகவுள்ளன. நகரம் சிறியதுதான் ஆனால் அது ஒரு மெட்ரோ நகரத்தை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அயோத்தியின் வளர்ச்சிக்காக எங்களிடம் ஒரு மாஸ்டர் பிளான் உள்ளது, அதில் அயோத்தியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளை மாற்றியமைப்போம், இதற்காக அருகிலுள்ள மாவட்டத்தை கண்காணித்து வருவதாகவும் தயாள் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்வேறு தொழில்களில் இருந்து பல முதலீடுகளைப் பெற்று வரும் அயோத்தியில், யாத்ரீகர்கள் தங்குவதற்கான தங்குமிடங்களையும் உருவாக்கியுள்ளோம் என்றும் ஆனால் இது யாத்ரீகர்களால் இயக்கப்படும் கோயில் நகரமாக இருப்பதால் சுற்றுலாத் துறையின் முதுகெலும்பாக இருக்கும் என்று கௌரவ் தயாள் கூறினார்.

Tags :
Advertisement