For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய பயணம்"...! - தனது நடை பயணம் குறித்து அண்ணாமலை பேட்டி.!

12:57 PM Feb 20, 2024 IST | 1newsnationuser4
 தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய பயணம்        தனது நடை பயணம் குறித்து அண்ணாமலை பேட்டி
Advertisement

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரத்தில் தொடங்கிய இவரது பயணத்தை, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனையைப் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறினார் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கிறது.

Advertisement

இந்தக் கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற இருப்பதாக அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் பாரத பிரதமர் மோடி, இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாமலை தனது நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். செல்லும் இடங்களில் எல்லாம் பொது மக்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் 10 ஆண்டு கால சாதனையை எடுத்துரைப்பதோடு தமிழகத்தை ஆளும் திமுக அரசின் குறைகளையும் சுட்டிக்காட்டி வருகிறார்.

தற்போது சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அவரது நடைப்பயணம் தொடர்கிறது. இது தொடர்பாக தாம்பரம் கூட்டத்தில் பேசிய அவர், "என் மண் என் மக்கள் நடைபயணம், பொது மக்களிடம் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது" என தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறி இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும், இளைஞர்களுக்காகவும் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

சென்னையின் நுழைவு வாயிலான தாம்பரத்தில் தனக்கு கிடைத்த ஆதரவு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். பஞ்சுமிட்டாய் தடை செய்யும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது சத்து மருந்தா.? எனவும் கேள்வி எழுப்பினார். திமுக அரசின் ஆட்சியில், இளைஞர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிவதாக குற்றம் சாட்டினார். இந்தியாவிற்கு சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.

English Summary: There is a huge political change in Tamil Nadu.People wants BJP rule for the future of youngsters and kids.Annamalai speech during his en man en makkal journey.

Read more: https://1newsnation.com/60-lacs-donkeys-were-slaughtered-every-year-for-skin-trade/

Tags :
Advertisement