நடிகர் மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு..!! மருத்துவமனையில் அனுமதி..!!
மலையாள நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். தனது அசாத்திய நடிப்புத்திறனால் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழகத்திலும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 64- வயதான மோகன்லால் இன்று திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாள திரையுலகின் பிரபல நடிகர் மோகன்லால் தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மோகன்லால் உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “மோகன்லாலுக்கு அதிக காய்ச்சலுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அவருக்கு சுவாச தொற்று இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்கள் பொது நிகழ்ச்சியில் எதிலும் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்ள் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அண்மையில் வயநாடு நிலச்சரிவின் போது பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்டுப் பணிகளில் ஈடுபட்ட நடிகர் மோகன்லால் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.
Read more ; தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு..!! – ஆட்சியர் உத்தரவு