ஓராண்டுக்குள் இந்தியாவில் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலை..!! ஆப்பிள் நிறுவனம் போட்ட பிளான்..!!
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதியில் சுமார் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும், நேரடியாகவும், மறைமுகமாகவும், 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும், அதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஐபோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்கள் பலரால் விரும்பி வாங்கப்படுகிறது. சீனாவிலிருந்து தனது வணிகத்தை முழுவதுமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், அதேநேரத்தில், இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனை அதிகரிக்கு வகையில் செயல்பட்டு வருகிறது.
இதன்மூலம் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம். இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் பணியமர்த்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
ஆப்பிளின் விரிவாக்கம், 2025ஆம் நிதியாண்டு இறுதிக்குள் 5,00,000 முதல் 6,00,000 மொத்த வேலைகளை உருவாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தற்போது ஃபாக்ஸ்கான், டாடா, பெகாட்ரான், ஃபாக்ஸ்லின்க், சால்ப்காம் மற்றும் மதர்சன் உள்ளிட்ட ஐபோன் அசம்பிளி மற்றும் சப்ளையர்கள், 2020ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை (PLI) திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் 1.65 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்து, மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 6 லட்சமாக உயரும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
Read more ; இந்தியாவில் மீண்டும் அச்சுறுத்தும் சண்டிபுரா வைரஸ்..!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!