For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராவணன் மண்டோதரியின் திருமணம் நடைபெற்ற தலம்.. இக்கோயிலுக்கு இத்தனை சிறப்புகளா..?

There are many special places in Tamil Nadu. One of them is the shrine called 'Uthra Gosa Mangai'. Let's see the history of this temple in detail.
06:00 AM Jan 07, 2025 IST | Mari Thangam
ராவணன் மண்டோதரியின் திருமணம் நடைபெற்ற தலம்   இக்கோயிலுக்கு இத்தனை சிறப்புகளா
Advertisement

தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘உத்திர கோச மங்கை’ என்ற திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.

Advertisement

உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன.

தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘உத்திர கோச மங்கை’ என்ற திருத்தலம். ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக வரலாற்று தகவல் காணப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள
ஸ்ரீ மங்களநாதர் சுவாமி திருக்கோயில்தான் உலகின் முதல் சிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் புனித தலங்களில் மிகச்சிறப்பான கோயிலாக கருதப்பட்டு வருகிறது. நவகிரகங்களை பற்றி அறியாத காலகட்டத்தில் சூரியன் சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களை மட்டும் வைத்து வழிபட்டு வந்தனர். உத்திரனான சிவபெருமான் தனது மனைவியான  பார்வதி தேவிக்கு( மங்கைக்கு) வேத ரகசியங்களை கற்பித்த இடம்  இது தான். இதனாலேயே இந்த இடத்திற்கு உத்திரகோசமங்கை என்ற பெயர் வர காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

5100 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த ராமாயண காலத்திலும் உத்தரகோசமங்கை திருக்கோயில் இருந்து வந்ததாக வரலாற்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் அரசனான ராவணன் எனும் இலங்கேஸ்வரன் உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வந்து தரிசனம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இக்கோயிலில் ஒரு நாளில் மூன்று முறை அபிஷேகம் நடக்கும். திருவாதிரை நாள் தான் சிவனை வழிபட சிறப்பான நாட்கள் என்பதால் அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக சிவ பக்தர்கள் இக்கோயிலில் வந்து மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

Read more ; “எவன் கூட டி, இவ்ளோ நேரம் பேசுற”; கிச்சனில் இருந்த கரண்டியால், கணவன் செய்த காரியம்..

Tags :
Advertisement