அப்போவே ’நீயா நானா’ நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் மாரி செல்வராஜ்..!! வைரலாகும் வீடியோ..!!
உதவி இயக்குநராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி 'பரியேறும் பெருமாள்' படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார். அதை தொடர்ந்து கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படத்தை இயக்கினார். அடுத்ததாக, சிறு வயதில் அவர் சந்தித்த சாதி, மத பாகுபாடுகளை மையமாக வைத்து 'வாழை' படத்தை இயக்கினார். தற்போது அந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு 'நீயா நானா' நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் கலந்து கொண்ட வீடியோ ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. ஒரு இயக்குநராக மாரி செல்வராஜுக்கு மக்கள் மத்தியில் அடையாளம் கிடைப்பதற்கு முன்னரே அவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் 'நீயா நானா' நிகழ்ச்சியில் "இளம் தலைமுறையினர் ரசிக்கும் நடனங்கள் எது" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றார்.
அதில் பேசிய மாரி செல்வராஜ், "சாவுக்கு முன்னாடி ஆடுற டான்ஸுக்கு யாருக்குமே பதில் சொல்ல தேவையில்லை. பயப்பட தேவையில்லை. எனக்கு எங்க தோணுதோ நான் அங்க ஆடுவேன். நிறைய பசங்க அப்பா இறந்ததுக்கு கூட மாலை போட்டுக்கிட்டு ஆடி இருக்காங்க. இதை எல்லாரும் சாவு டான்ஸ்னு சொல்றாங்க. இதை சென்னையில உள்ள பிரபலமான இடத்துல எங்கேயாவது ஆடுனா ரசிக்க மாட்டாங்க. பரதம் இல்லாட்டி வேற ஏதாவது டான்ஸ் ஆடுறவங்களை மேடை ஏறி போய் பாராட்டுவாங்க. ஆனா, இந்த டான்ஸ் ஆடுபவர்களை யாரும் ரசிப்பதில்லை. தன்னுடைய சந்தோஷத்தை நிரூபிக்குற ஒரு நடனம் இது. யாருக்கும் நிரூபிக்க தேவையில்லாத ஒரு டான்ஸ்" என பேசி இருந்தார் மாரி செல்வராஜ்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, நீயா நானா நிகழ்ச்சியில் தார தப்பட்டை மியூசிக் ஒலிக்க மாரி செல்வராஜ் தன்னுடைய மனம் போல சந்தோஷமாக ஆடி இருந்தார். உடன் சாண்டி மாஸ்டரும் நடனம் ஆடி இருந்தார். மாரி செல்வராஜ் ஆடிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Read More : ’இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குங்கள்’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..!!