For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’அந்த பெண்ணுக்கு ஏமாற்றும் எண்ணம் இல்லை’..!! ’கடைசி நேரத்தில் ட்விஸ்ட்’..!! வழக்கை ரத்து செய்த நீதிபதிகள்..!!

It cannot be considered a crime to have the courage not to tell her parents about her relationship with her boyfriend.
02:42 PM Aug 30, 2024 IST | Chella
’அந்த பெண்ணுக்கு ஏமாற்றும் எண்ணம் இல்லை’     ’கடைசி நேரத்தில் ட்விஸ்ட்’     வழக்கை ரத்து செய்த நீதிபதிகள்
Advertisement

புனேவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர் மணமகன் பார்த்துள்ளனர். திருமணத்திற்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், திருமணத்திற்கு முன்பு கடைசி நேரத்தில், தன்னுடைய காதலனுடன் அந்த பெண் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதனால் மனமுடைந்த மணமகன் வீட்டார், பெண் மீதும் அவரது பெற்றோர் மீது புகாரளித்தனர். அதன் அடிப்படையில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

இந்நிலையில், கடந்த 2024இல் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் அப்பெண்ணும், அவரது பெற்றோரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும், இளம்பெண் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தனது காதலனுடனான உறவை துணிச்சலுடன் தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருந்ததை குற்றமாக கருத முடியாது. மௌனமாக இருப்பது நியாயமற்றதாக இருக்கலாம். ஆனால், நேர்மையற்றதாக இருக்காது. மகள் அமைதியாக இருக்கிறார் என்பதால், திருமணத்திற்கு சம்மதித்துவிட்டார் என பெற்றோர் நினைத்துள்ளனர். ஆனால், கடைசி நேரத்தில் பெண் தான் விரும்பும் வாலிபருடன் சென்றது, நேர்மையற்ற செயல் கிடையாது. ஏமாற்றுவதாக இருந்தால், அந்த எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே இருக்க வேண்டும். ஆனால், இங்கு ஆரம்பத்தில் இருந்தே ஏமாற்றும் நோக்கம் அந்த பெண்ணுக்கு கிடையாது. பெண் தனது சொந்த விருப்பப்படி ஒருவரை காதலித்ததால் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Read More : பெண்களே..!! சுயதொழில் தொடங்க போறீங்களா..? தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement