டைட்டானிக் கப்பல் மூழ்கிய ஆண்டு..!! உலகின் மிக வயதான மனிதர் காலமானார்..!! ஆயுளின் ரகசியம் என்ன..?
டைட்டானிக் கப்பல் மூழ்கிய அதே ஆண்டில் பிறந்த உலகின் மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜான் டின்னிஸ்வுட் தனது 112 வயதில் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார். இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலில் நகரில் கடந்த 26 ஆகஸ்ட் 1912ஆம் ஆண்டு ஜான் டின்னிஸ்வுட் பிறந்தார். இவர், தனது மகள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வந்தார். மேலும், இந்தாண்டு ஏப்ரல் மாதம் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என்ற சான்றிதழைப் பெற்றார்.
மறைந்த ஜான் டின்னிஸ்வுட் முன்னதாக கூறுகையில், ஆரோக்கியமாக இருக்க எல்லாவற்றிலும் மிதமானதாக இருக்க வேண்டும். நீங்கள் அதிகமாக குடித்தால் அல்லது அதிகமாக சாப்பிட்டால் அல்லது அதிகமாக நடந்தால், நீங்கள் எதையும் அதிகமாக செய்தால் இறுதியில் பாதிக்கப்படுவீர்கள் என்று ஆயுளின் ரகசியத்தை கூறினர். 114 வயதான வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸின் மரணத்தைத் தொடர்ந்து, ஜான் டின்னிஸ்வுட் ஏப்ரல் மாதம் உலகின் வயதான மனிதர் ஆனார். தற்போது உலகில் வாழும் மிகவும் வயதான பெண்மணி ஜப்பானைச் சேர்ந்த டோமிகோ இடூகா ஆவார். அவருக்கு வயது 116 ஆகிறது.
Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..!! அசால்ட்டா இருக்காதீங்க..!! கட்டாயம் பொருட்கள் கிடைக்காது..!!