80 ஆண்டுகளில் இல்லாத கடும் வெள்ளம்!… 75 பேர் பலி!… 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை!
flood: பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை 75 பேர் பலியாகியுள்ளனர். பலரை காணவில்லை என்பதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. நேற்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு ஏற்கனவே 37 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 75பேர் பலியாகி உள்ளனர். மேலும் 101 பேர் காணவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
போர்டோ அலெக்ரேவில், குய்பா ஏரி அதன் கரைகளை உடைத்து தெருக்களில் வெள்ளம் புகுந்தது. இதனால், போர்டோ அலெக்ரேயின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து விமான சேவைகளும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம் காரணமாக 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை கனமழை தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: சவுக்கு சங்கர் கைது ; “பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் மிதிக்கும் திமுக அரசு” – சசிகலா ஆவேசம்!