For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மனித மூளையை ஸ்கேன் செய்த சக்திவாய்ந்த எம்ஆர்ஐ இயந்திரம்! தெளிவுடன் படம் பிடிக்கப்பட்ட உயிருள்ள மூளையின் படங்கள் வைரல்!

11:04 AM Apr 03, 2024 IST | Kokila
மனித மூளையை ஸ்கேன் செய்த சக்திவாய்ந்த எம்ஆர்ஐ இயந்திரம்  தெளிவுடன் படம் பிடிக்கப்பட்ட உயிருள்ள மூளையின் படங்கள் வைரல்
Advertisement

Strongest MRI: உலகின் மிக சக்திவாய்ந்த எம்ஆர்ஐ இயந்திரம் மூலம் எடுக்கப்பட்ட மனித மூளையின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

பிரான்சின் அணுசக்தி ஆணையத்தின்(CEA) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் நமது மனம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அவற்றை பாதிக்கும் நோய்கள் பற்றி தெளிவான நுண்ணறிவை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் 2021ம் ஆண்டு பூசணிக்காயை ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர், மனித மூளையை ஆய்வு செய்ய சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

AFP-ன் அறிக்கையின்படி, இந்த வெற்றியானது, Iseult திட்டத்தின் ஒரு பகுதியாக 20 ஆண்டுகளுக்கும் மேலான R&D-யின் பலனாகும். ஆரோக்கியமான மற்றும் நோயுற்ற மனித மூளைகளை முன்னோடியில்லாத தீர்மானத்துடன் சோதனை செய்வதே இதன் லட்சியம் என்று அணுசக்தி ஆணையம் கூறியுள்ளது. கண்டுபிடிப்பாளர் நிகோலா டெஸ்லாவின் பெயரிடப்பட்ட 11.7 டெஸ்லாஸ் காந்தப்புலத்தை ஸ்கேனர் உருவாக்கிறது என்றும் இந்த உயர் சக்தியானது வழக்கமான எம் ஆர் ஐ-களைவிட 10 மடங்கு துல்லியத்துடன் படங்களை எடுக்க இயந்திரத்தை செயல்படுத்துகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது பொதுவாக மூன்று டெஸ்லாக்களின் அதிகபட்ச சக்தியை கொண்டுள்ளது. Iseult என்று அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த ஸ்கேனர் மூலம் எடுக்கப்பட்ட படங்களை இயற்பியலாளர் அலெக்ஸாண்ட்ரே விக்னாட், கணினி திரையில் உள்ள நிலையான எம் ஆர் ஐ படங்களுடன் ஒப்பிட்டார். இது உலகிலேயே முதன்முதலில் மூளையின் நோய்க்குறியீடுகளுக்கு சிறந்த கண்டறிதல் மற்றும் சிகிச்சையை அனுமதிக்கும் என்று பிரான்ஸ் அமைச்சர் Sylvie Retailleau நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவும், தென்கொரியாவும் இதுபோன்ற சக்திவாய்ந்த எம் ஆர் ஐ இயந்திரங்களில் வேலை செய்துவருவதாகவும், ஆனால் இன்னும் மனிதர்களின் படங்களை ஸ்கேன் செய்ய தொடங்கவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சக்திவாய்ந்த ஸ்கேனரின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று மூளையின் உடற்கூறியல் பற்றிய நமது புரிதலை செம்மைப்படுத்துவது மற்றும் குறிப்பிட்ட பணிகளை செய்யும்போது எந்தெந்த பகுதிகள் செயல்படுத்தப்படுகின்றன.

முகங்கள், இடங்கள் அல்லது வார்த்தைகள் போன்ற குறிப்பிட்ட விஷியங்களை மூளை அடையாளம் காணும்போது, மூளையின் பல்வேறு பகுதிகள் செயலூக்கமடைவதை காண விஞ்ஞானிகள் ஏற்கனவே எம் ஆர் ஐகளை பயன்படுத்தியுள்ளனர். 11.7 டெஸ்லாக்களின் வலிமையுடன் மூளையின் அமைப்பு எவ்வாறு மனக் கணிதத்தை படிப்பது அல்லது செய்வது போன்ற அறிவாற்றல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது என்பதை புரிந்துகொள்வதில் ஐஸால்ட் ஆழமாக தெரிந்து கொள்ளலாம் என்று இத்திட்டத்தின் அறிவியல் இயக்குநர் நிக்கோலஸ் பவுலண்ட் கூறுகிறார்.

Readmore: குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது அரிசி விலை..!! இல்லத்தரசிகள் நிம்மதி..!!

Tags :
Advertisement