முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உலகமே அதிர்ச்சி!. வைரஸ்களை இனப்பெருக்கம் செய்யும் சீனாவின் ஃபர் பண்ணைகள்!. அவசர நிலைக்கு அழைப்பு விடுத்த ஆராய்ச்சியாளர்கள்!

China's fur farms a breeding ground for global viral threats, says study
05:41 AM Sep 06, 2024 IST | Kokila
Advertisement

China fur farms: மனிதர்களுக்கு பரவும் திறன் கொண்ட 125 வைரஸ்கள், சீனாவின் ஃபர் பண்ணைகளில் விலங்குகளில் கலப்பது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 36 முன்னர் அறியப்படாத வைரஸ்கள் அடங்கும். இவற்றில், 39 உயிரினங்களைக் கடப்பதற்கும் மனிதர்களைப் பாதிக்கக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் கருதப்பட்டது.

Advertisement

நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவில், கடந்த 2021 முதல் 2024 வரையில் ஃபர் பண்ணைகளில் உயிரிழந்த 461 விலங்குகளை இந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். நரிகள், ரக்கூன் நாய்கள், முயல்கள் ஆகிய விலங்குகளை வைத்து ஆய்வு செய்துள்ளனர். மேலும், சுமார் 50 வன விலங்குகளும் இதில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஹெபடைடிஸ் ஈ மற்றும் ஜப்பானிய மூளையழற்சி போன்ற 13 புதிய வகை வைரஸ்கள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஃபர் பண்ணைகள் எப்படி வைரஸ் குடோன்களாக இருக்கிறது.. அது எவ்வளவு ஈஸியாக மனிதர்களுக்குப் பரவும் ஆபத்து இருக்கிறது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது.

விலங்குகளிடையே பரவும் வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் வைராலஜிஸ்ட் எட்வர்ட் ஹோம்ஸ் இதை மேற்கொண்டுள்ளார். ஃபர் பண்ணைகள் காரணமாக எதிர்காலத்தில் வைரஸ்கள் பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ள எட்வர்ட், இந்த பண்ணைகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த பண்ணைகளை மூடவில்லை என்றால் இதில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

உலகளாவிய ஃபர் வர்த்தகம் பல பில்லியன் டாலர் தொழில் ஆகும், சீனா உலகின் ஃபர் உற்பத்தியில் 80% க்கும் அதிகமாக உள்ளது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் வனவிலங்கு வர்த்தகத்துடன் இணைக்கப்பட்ட வைரஸ் பரவலின் பரந்த பிரச்சினைக்கு கவனத்தை ஈர்க்கின்றன, இது COVID-19 இன் தோற்றத்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

Readmore: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்தார்…!

Tags :
125 virusChinafur farmswarning
Advertisement
Next Article