வேகமெடுக்கும் மர்ம நோய்.. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!! பதற்றத்தில் உலக நாடுகள்..
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசில் அடையாளம் காணப்படாத மர்ம நோயால் பலர் உயிரிழந்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டில் பெயர் தெரியாத மர்ம காய்ச்சல் காற்றில் பரவி வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் இருந்தே இதுவரை 400 பேர்கள் அந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களை அதிக அளவில் மர்ம நோய் பாதித்துள்ளது. அடையாளம் காணப்படாத மர்ம நோயானது அடுத்த பெருந்தொற்றாக உருமாறலாம் என்ற அச்சம் தற்போது அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் தீவிர ஊட்டச்சத்து குறைபாடும் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, போதுமான சாலை வசதி இல்லை, மழை உள்ளிட்ட காரணங்களால் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, இந்த மர்ம நோய் Disease X ஆக இருக்கலாம் என்றும் பொது சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
Disease X எவ்வளவு மோசமான நோய் : Disease X இன்னும் கண்டறியப்படாத நோயாக இருந்தாலும் இந்த நோய்க்கிருமி என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ விஞ்ஞானிகளும் உலக சுகாதார நிறுவனமும் கணித்து வைத்திருக்கிறது. இந்த Disease X நோயின் பரவலாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமல்லாது, உலகம் முழுமைக்கும் பரவும் ஒரு தொற்றாக இருக்கப் போகிறது. இதனால் இறப்புகள் நிறைய நிகழும். உலக நாடுகளின் பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புகள், சுகாதார அமைப்புகள் அத்தனையிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இந்த நோயின் தீவிரம் அது உண்டாகக் காரணமாகும் வைரஸ், சுகாதார அமைப்புகளின் செயல்பாடு ஆகியவற்றைப் பொருத்து இருக்கக்கூடும்.
நோய் X இன் அறிகுறிகள்: காய்ச்சல் மற்றும் குளிர்,
கடுமையான சுவாசக் கோளாறு,
தசை மற்றும் மூட்டு வலி,
வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகள்,
விவரிக்க முடியாத இரத்தப்போக்கு அல்லது சொறி,
சோர்வு மற்றும் பலவீனம்.
தலைவலி அல்லது நரம்பியல் தொந்தரவுகள்.
Read more ; பார்சி உடையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் பெண்.. டாடா குடும்பத்தின் வைரம்..!! யார் இந்த மெஹர் பாய் டாடா?