2024 தேர்தல்... ஓ.பி.எஸ் தரப்பில் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகள் இன்று தொடக்கம்...!
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகள் இன்று தொடங்க உள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமை நீதிமன்ற உத்தரவுகளின் மூலமாக முடிவுக்கு வந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகள் இன்று தொடங்க உள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் காலை 10:35 மணிக்கு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் தொடங்க உள்ளன. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி பல்வேறு முடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமை நீதிமன்ற உத்தரவுகளின் மூலமாக முடிவுக்கு வந்த நிலையில், இன்றைய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனியார் திருமண மண்டபத்தில் பேரவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமார் உள்பட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.