உஷார்!. அழகா இருக்க ஒரே நாளில் 6 அறுவை சிகிச்சை!. சீனப் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!.
Cosmetic Surgeries: பொதுவாக எல்லோருக்குமே தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் விருப்பம் இருக்கும். பணியிடத்துக்கேற்ப, விசேஷங்களுக்கேற்ப, வேறு நிகழ்வுகளுக்கேற்ப, இப்படி ஒவ்வோர் இடத்துக்கும் ஒவ்வொரு மாதிரி மேக்கப்பும் ஹேர்ஸ்டைலும் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் இன்று. அழகாக இருக்க வேண்டும் என்ற மோகத்தில் ஒருவர் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம், அழகாக இருக்க 6 முறை அறுவை சிகிச்சைகளை செய்துகொண்ட சீனப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீனாவின் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2 குழந்தைகளுக்கு தாயானார். அவர் மிகவும் அழகாகவும் இளமையாகவும் இருக்க விரும்பியுள்ளார். இதற்காக, காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். அவர் ஒரு அழகு நிலையத்திற்குச் சென்று ஒரே நாளில் 6 அழகுசாதன சிகிச்சைகளை செய்துகொண்டுள்ளார். இதற்காக இரட்டை கண் இமை அறுவை சிகிச்சை செய்து மூக்கை சரி செய்து கொண்டார். இதற்குப் பிறகு, லிபோசக்ஷன் செயல்முறையைச் செய்து கொழுப்பை நீக்கி தனது தொடைகளை மெலிதாக்கியுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண் தனது முகம் மற்றும் மார்பகங்களில் கொழுப்பை செலுத்தும் செயல்முறையை மேற்கொண்டார். அதாவது, பல மணி நேரம், ஒன்றன் பின் ஒன்றாக காஸ்மெட்டிக் நடைமுறைகளைச் செய்துகொண்டே இருதுள்ளார். இந்த அறுவை சிகிச்சைகள் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு இந்த பெண் டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இறந்ததாகவும், லிபோசக்ஷன் அறுவை சிகிச்சையே இதற்குக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், ஒன்றன் பின் ஒன்றாக செய்யப்படும் அறுவை சிகிச்சைகளும் அவரது உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, அவரது குடும்பம் மருத்துவமனை மீது வழக்குத் தொடர்ந்தது மற்றும் பெரிய இழப்பீடு கோரியது. ஆனால் மருத்துவ மனையில் மேல்முறையீடு செய்தது. இருப்பினும், பெண்ணின் குடும்பத்திற்கு சுமார் 5 லட்சத்து 90 ஆயிரம் யுவான் அதாவது 70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. 9 டிசம்பர் 2020 அன்று தொடரப்பட்ட வழக்கிற்கு சமீபத்தில் தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.