சேலம் போலீசாரை கதிகலங்க விட்ட பெண்..!! 5-வது கணவருடன் செல்ல அடம்..!! மீதமுள்ள 4 பேரின் கதி..? நீதிமன்றம் தீர்ப்பு..!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 1ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், "கடந்த 28ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காடு செல்வதற்காக சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மனைவியோடு வந்திருந்தேன். பாத்ரூம் செல்வதாக சொல்லிவிட்டு சென்ற என் மனைவியை காணவில்லை. என்னுடைய அம்மாவின் 20 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணத்தோடு அவர் மாயமாகிவிட்டார். எனவே அவரை கண்டுபிடித்து தர வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இதையடுத்து, போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன 26 வயது பெண்ணை தேட துவங்கினார்கள். அப்போதுதான், மதுரையில் அந்த பெண், இன்னொருவருடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. ஒரு கட்டிட தொழிலாளியுடன் அந்த பெண் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த அந்த பெண்ணை மதுரையிலிருந்து மீட்டு, சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். ஸ்டேஷனிலேயே விசாரணையையும் துவங்கினார்கள்.
”உன் கணவனை விட்டுவிட்டு ஏன் ஓடிச்சென்றாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த பெண், "என்னை காணவில்லை என்று உங்களிடம் புகார் தந்தவர், என்னுடைய உண்மையான கணவரே கிடையாது. அவர் எனக்கு 4வது கணவன். ஒரு வருஷமாக அவனுக்கு நான்தான் அடைக்கலம் தந்து, என்கூடவே வெச்சிருந்தேன்" என்று கூலாக பதில் சொன்னார். அப்படியானால், யார் உன்னுடைய கணவர்? குடும்பம் பற்றி போலீசார் கேட்டார்கள். அதற்கு அந்தபெண் சொன்ன தகவல்களை கேட்டு போலீசாரே மிரண்டு போய்விட்டனர்.
சேலம் ஆத்தூரை சேர்ந்த ஒருவரை, இந்த பெண் திருமணம் செய்திருக்கிறாராம். 2 மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். ஆனாலும், முதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரை விட்டு தனியாக சென்றுவிட்டார். 3 குழந்தைகளையும், முதல் கணவரிடமே தந்துவிட்டு, இந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். பிழைப்புக்காக கட்டிட வேலைக்காக இந்த பெண் வேறு இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு கட்டிட வேலையில் உள்ள பல ஆண்களுடன் பழகி நெருக்கமாகி உள்ளார்.
இப்படித்தான் கட்டிட வேலைக்கு கேரளா பாலக்காடுக்கு சென்றபோது, கடலூரை சேர்ந்த நபருடன் பழகி, ஒரு வருடத்துக்கும் மேலாக அவருடனே குடும்பம் நடத்தி உள்ளார். கடந்த மாதம், சேலம் ரயில்வே ஸ்டேஷனில் கட்டுமான வேலைகள் நடப்பதால், 2 பேருமே சேலத்துக்கு வந்துள்ளனர். அப்போது, அங்கே மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளியுடன், இந்த பெண்ணுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 4-வதாக வாழ்ந்த அவருடன்தான், ரயிலில் வந்து கொண்டிருந்தார். ஆனால், பாதிவழியில் அவரை ஸ்டேஷனிலேயே அம்போவென்று கழட்டி விட்டுவிட்டு, 5வதாக, மதுரைக்காரரோடு கிளம்பி சென்றுவிட்டார்.
அந்த மதுரைக்காரருக்கும் கல்யாணமாகிவிட்டது. ஆனாலும், இந்த பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதெல்லாம் தெரியாமல், 4-வது கணவன், மனைவியை காணவில்லை என்று போலீசுக்கு போகவும்தான், இவ்வளவு விஷயங்களும் தெரியவந்துள்ளது. இப்போது யாருடன் இந்த பெண்ணை அனுப்பி வைப்பது என்று போலீசார் குழம்பி விட்டனர்.. ஆனால், 4-வது நபருடன் போக முடியாது என்றும், மதுரைக்காரர்தான் வேண்டும் என்றும், அடம் பிடித்திருக்கிறார்.
ஆனால், 4வது நபரோ, போலீசாரிடம் அழ ஆரம்பித்துவிட்டார். அந்த பெண்ணை எப்படியாவது என்கூடவே அனுப்பி வெச்சிடுங்க சார் என்று கெஞ்சினார். இதனால் மறுபடியும் அந்த பெண்ணிடம் போலீசார் பேசிப்பார்த்தார்கள்.. ஆனால், பெண்ணின் பிடிவாதத்தை பார்த்ததுமே, போலீசார் 4வது நபருக்கு அறிவுரை சொல்லி, அந்த பெண்ணை விட்டுவிடும்படி சொன்னார்கள். ஆனால், 20 பவுன் நகை, பணத்தை அந்த பெண் எடுத்துச்செல்லவில்லையாம்.
மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்பதற்காக, 4-வது நபர் போலீசில் அவ்வாறு புகார் கொடுத்தது தெரியவந்தது. இந்த பஞ்சாயத்து பேசி முடிக்கவே இரவு நேரம் ஆகிவிட்டதால், சேலத்தில் உள்ள காப்பகத்தில், அந்த பெண்ணை போலீசார் தங்கவைத்தனர். பிறகு நேற்று காலை, சேலம் கோர்ட்டில் பெண்ணை ஆஜர்படுத்தினார்கள். இறுதியில் 5-வது நபருடன் செல்லவே ஆசைப்படுவதாக அந்த பெண் சொல்லவும், அவரது விருப்பப்படியே அனுப்பி வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம். 1, 2, 3, 4 என மொத்தம் 4 நபர்களை விட்டுவிட்டு, 5வது நபருடன் குதூகலமாக குடும்பம் நடத்த சென்றுள்ளார் அந்த பெண். இதில் 4வது நபர் அழுதுகொண்டேயிருக்கிறாராம்.. இறுதியில், ஒருவழியாக வழக்கு முடிந்து, நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் சேலம் போலீசார்.