ஒன்றல்ல, இரண்டல்ல 69 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!. கின்னஸ் உலக சாதனை!
69 Children: ரஷ்யாவை சேர்ந்த பெண் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
தாயாக மாறுவது உலகில் எந்தப் பெண்ணுக்கும் பெருமையான தருணம். அந்தவகையில் ரஷ்யாவை சேர்ந்தவர் வாலண்டினா வாசிலீவ். இவரது கணவர் ஃபியோடர் வாசிலீவ். இந்தநிலையில், 2வதாக வாலண்டினா வாசிலீவை திருமணம் செய்து கொண்டார் ஃபியோடர் . இந்தநிலையில், 1725 முதல் 1765 வரை இந்த பெண் 69 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். அவர் தனது வாழ்நாளில் 27 முறை கர்ப்பமாக இருந்தார். இதன் காரணமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பெண்ணின் பெயர் இடம் பெற்றுள்ளது.
அதாவது, வாலண்டினா 16 இரட்டையர்கள் என 69 குழந்தைகளை பெற்றெடுத்தது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றெடுப்பது அசாதாரணமானது, ஆனால் கோட்பாட்டளவில் சாத்தியமாகும். இருப்பினும், தற்போதைய காலத்தை மனதில் வைத்து, ஒரு பெண் எத்தனை குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்பதற்கு உறுதியான பதில் இல்லை.
2 திருமணங்கள் செய்துகொண்ட ஃபியோடர் வாசிலீவின் முதல் மனைவிக்கு 8 குழந்தைகள் உள்ளனர். அதன்படி, இரண்டு மனைவிகளுக்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 87 ஆகும். ஆனால், 84 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.