முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தன்னுடைய ஆபாச வீடியோவை வைத்தே ஆபீஸரை மடக்கிய பெண்..!! சென்னை ஓட்டலில் பரபரப்பு சம்பவம்..!!

The matter of extorting Rs 2.70 lakh from a Central Public Works Department officer with a knife and threatening Rs 10 lakh to not publish a sex video has caused a shock.
11:30 AM May 23, 2024 IST | Chella
Advertisement

மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து ரூ.2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (59). இவர், மத்திய பொதுப்பணித்துறை (CPWD -EE) செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சாலையில் யூனிகான் டவர் என்ற குடியிருப்பு வளாகத்தில் தனி வீடு எடுத்து தங்கியுள்ள இவருக்கும், மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரது மனைவி சுபாஷினி (40) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் காரைக்காலுக்கு செல்லும்போதும் வறுமையை காரணம் காட்டி சிறுக சிறுக சுபாஷினி பணம் பெற்றுள்ளார். அப்போது, கடந்த மாதம் 27ஆம் தேதி இருவரும் உல்லாசமாக இருந்ததை வெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷினி வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர், கடந்த மாதம் 29ஆம் தேதி வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்த சுபாஷினி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளரான மயிலாடுதுறையை சேர்ந்த கில்லி பிரகாஷ் (எ) பிரகாஷ் (40) என்பவருக்கு தகவல் தெரிவித்து தனியார் விடுதிக்கு அவரையும் வரவழைத்துள்ளார். அங்கு தனது கூட்டாளிகளான முகமது நசீர் (39), தினேஷ் பாபு (31) ஆகியோருடன் வந்த கில்லி பிரகாஷ், சுபாஷினியுடன் சேர்ந்து கொண்டு வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அப்போது அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டு மற்றும் ஜிபே வாயிலாக ரூ.2.70 லட்சத்தை பிடுங்கி உள்ளனர். மேலும், சுபாஷினியுடன் வெங்கடேசன் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கூறி அவரை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து வெங்கடேசனுக்கு தொந்தரவு அளித்து வந்த நிலையில். இச்சம்பவம் குறித்து வெங்கடேசன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, விரைந்து செயல்பட்ட போலீசார் கில்லி பிரகாஷ், சுபாஷினி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : உங்கள் பான் கார்டில் ஏதேனும் தவறு இருக்கா..? இனி ஈசியாக மாற்றலாம்..!! எப்படி தெரியுமா..?

Advertisement
Next Article