For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்..!! அடுத்து நடந்த சோகம்..!! அதிர்ச்சி வீடியோ..!!

A woman who was standing near the stairs of a private bus near Antipatti suddenly slipped from the bus and fell on the road.
01:26 PM Jun 10, 2024 IST | Chella
ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்     அடுத்து நடந்த சோகம்     அதிர்ச்சி வீடியோ
Advertisement

ஆண்டிப்பட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்த பெண், திடீரென பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தீபலட்சுமி. இவர், நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தார். அப்போது, படிக்கட்டின் அருகிலேயே கம்பியை பிடித்தவாறு நின்றபடி பயணம் மேற்கொண்டார். அப்பெண் நடத்துனரிடம் டிக்கெட் பெற்று அதனை கைப் பையில் வைக்கும் போது, எதிர்பாராத விதமாக சாலையில் தவறி விழுந்தார்.

இதனை கவனித்த ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார். இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி ஓடிச்சென்று, அந்த பெண்ணை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு பெயர் தீபலட்சுமி என்பது, அவர் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த பெண் பேருந்தில் இருந்து வெளியே தவறி விழும் சிசிடிவி காட்சிகளும், தவறி விழும் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கும் நடத்துனரின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடமலைக்குண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : அரசு ஊழியர்களுக்கு பணம் கொட்டப்போகுது..!! மிகப்பெரிய ஜாக்பாட்டை அறிவிக்கும் மோடி அரசு..!!

Tags :
Advertisement