முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கணவனுக்கு சாப்பாடு போட மறுத்த மனைவி..!! கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம்..!! நடந்தது என்ன..?

Enraged, Manu strangles his wife with a piece of cloth lying on his shoulder. In this, he died of suffocation.
01:42 PM Nov 11, 2024 IST | Chella
Advertisement

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது அம்பிகோலா என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் மனோஜ் (32). இவரை மனு என்று அழைப்பார்கள். இவர், தினசரி கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இவரது மனைவி கவுரம்மா. அவருக்கு வயது 28. கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். கவுரம்மா தனது செல்போனை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார்.

Advertisement

இதனால், கணவன் மனுவிற்கும், மனைவி கவுரம்மாவிற்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மனு தனது கவுரம்மாவிடம் சாப்பாடு போட்டுத் தருமாறு கேட்டுள்ளார். அப்போது, கவுரம்மா செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். கவுரம்மாவிடம் மீண்டும் சாப்பாடு பரிமாறுமாறு கூறியுள்ளார். ஆனால், கவுரம்மா சாப்பாடு பரிமாறாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மனு தனது மனைவி கவுரம்மாவை தாக்கியுள்ளார். மேலும், கோபத்தின் உச்சிக்கே சென்ற மனு தனது மனைவியின் கழுத்தை தனது தோளில் கிடந்த துண்டால் நெரித்துள்ளார். இதில், அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். கவுரம்மா - மனு சண்டையிடும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சண்டையைத் தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்கள் தடுப்பதற்கு முன்பே கவுரம்மாவை மனு கொலை செய்துவிட்டார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அதே கிராமத்தில் வசிக்கும் கவுரம்மாவின் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவுரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த மனுவையும் கைது செய்தனர்.

Read More : ”ஒட்டுத் துணி இல்லாம வீடியோ கால் வரணும்”..!! நண்பனை நம்பிய இளம்பெண்..!! கடைசியில் வைத்த ஆப்பு..!!

Tags :
உணவுகணவன் - மனைவிகர்நாடக மாநிலம்கொலை சம்பவம்
Advertisement
Next Article