For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமியின் மனைவி காலமானார்..!!

12:49 PM Aug 20, 2024 IST | Mari Thangam
 துக்ளக்  பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமியின் மனைவி காலமானார்
Advertisement

பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான சோ ராமசாமி. பகீரதன் என்பவர் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் ஒன்றின் பெயரான சோ என்பதையே தன் புனைப்பெயராக அவர் வைத்துக்கொண்டார். தன்னுடைய அங்கத எழுத்துகளுக்காகவும் அரசியல் விமர்சனங்களுக்காகவும் மிகவும் அறியப்பட்ட சோ, 1970ஆம் ஆண்டில் துக்ளக் வார இதழை துவங்கினார். அதன் பிறகு Pickwick என்ற ஆங்கில இதழையும் சில காலம் நடத்தினார்.

Advertisement

இவர் 2016ம் ஆண்டு காலமானார். இந்நிலையில், அவருடைய மனைவி சௌந்தரா ராமசாமி காலமானார். 84 வயதான சௌந்தரா ராமசாமி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நாளை முற்பகலில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோ ராமசாமி கடந்த 2016 இல் காலமான நிலையில். சென்னையில் தனது குடும்பத்துடன் சௌந்தரா ராமசாமி அவர் வசித்து வந்தார். திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more ; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்சன் மனைவிக்கு தொடர்பு..!! போலீசார் விசாரணை

Tags :
Advertisement