முழு உலகமே பிரதமர் மோடியை விரும்புகிறது!. எனது உண்மையான நண்பரே அவர்தான்!. டிரம்ப் நெகிழ்ச்சி!
Modi - Trump: அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதிபர் தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்தது. தேர்தல் நேற்று காலை முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பெரும்பான்மை பெறுவதற்கான 270 என்ற வாக்குகளை விட கூடுதலான வாக்குகளை பெற்று டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இதேபோல், தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். உலக அமைதிக்காக இரு தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என உறுதி மேற்கொண்டனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்தும், ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடு. பிரதமர் மோடி ஒரு உன்னதம் வாய்ந்த நபர் என்றார். பிரதமர் மோடியையும் இந்தியாவையும் உண்மையான ஒரு நண்பராக கருதுகிறேன் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியுள்ளார். வெற்றி பெற்ற பின்பு முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என டிரம்ப் கூறியுள்ளார்.
Readmore: ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு அஞ்சல் துறை சூப்பர் அறிவிப்பு…! நவம்பர் 30 வரை வீடு தேடி சான்றிதழ்…