For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செம வாய்ப்பு...! வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்யலாம் என அறிவிப்பு...! இந்த படிவம் இருக்க வேண்டும்...

07:20 AM Nov 05, 2023 IST | 1newsnationuser2
செம வாய்ப்பு     வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்யலாம் என அறிவிப்பு     இந்த படிவம் இருக்க வேண்டும்
Advertisement

சேலம் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 09.12.2023 வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 09.12.2023 வரை நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணிகளுக்கான படிவங்கள் 09.12.2023 வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள். நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும், Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, மேலும் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8 -யை பயன்படுத்த வேண்டும்.

மேலும் இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்ததில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 01.04.2024, 01.07.2024 மற்றும் 01.10.2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக நவம்பர் 04.11.2023, 05.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். 09.12.2023 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 05.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement