முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்…! தேடுதல் பணி தீவிரம்..!

Aircraft carrying Malawi Vice-President goes missing
12:02 AM Jun 11, 2024 IST | Kathir
Advertisement

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதால் அங்கு பதற்றம் நீட்டித்துள்ளது.

Advertisement

மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் திங்கட்கிழமை காலை புறப்பட்ட மலாவிய பாதுகாப்பு படை விமானம், ராடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன" என்று மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

விமான நிபுணர்களால் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதை அடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9:17 மணியளவில் விமானம் புறப்பட்டு, காலை 10:02 மணிக்கு Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட தரையிறங்க வேண்டும், ஆனால் விமானம் அப்படி இல்லாமல், ரேடாரில் இருந்து விலகியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த மே மாதம், ஹெலிகாப்டரில் சென்ற ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் பயணித்த அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Read More: மொஹஞ்சதாரோ அணுகுண்டு மூலம் தாக்கப்பட்டதா?. 3700 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளில் வெளியான உண்மை!

Tags :
malawi vice president missingmalawi vice president saulos chilima
Advertisement
Next Article