For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஈரானின் எச்சரிக்கைக்கு அடிபணிந்த அமெரிக்கா!… இஸ்ரேலுக்கு ஆதரவு தரமாட்டோம்!… வெள்ளை மாளிகை!

05:40 AM Apr 15, 2024 IST | Kokila
ஈரானின் எச்சரிக்கைக்கு அடிபணிந்த அமெரிக்கா … இஸ்ரேலுக்கு ஆதரவு தரமாட்டோம் … வெள்ளை மாளிகை
Advertisement

America: இஸ்ரேல் செய்யும் எந்தவொரு பதிலடியிலும் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம் வெள்ளை மாளிகை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இஸ்ரேலின் மக்களையும், அங்குள்ள அமெரிக்க வீரர்களையும் அமெரிக்க இரும்பு கவசம் கொண்டு பாதுகாக்கும் என உறுதியளித்தார். இதனிடையே இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிரான எந்தவொரு இஸ்ரேலிய எதிர் தாக்குதலிலும் அமெரிக்கா இணையாது என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவும். ஆனால் போரை விரும்பவில்லை என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து ஜோ பைடன் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இஸ்ரேல் செய்யும் எந்தவொரு பதிலடியிலும் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம். நாங்கள் அத்தகைய செயலில் பங்கேற்பதை கற்பனை செய்து பார்க்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

Readmore: ADMK | புதுச்சேரி அதிமுக வேட்பாளரை தோற்கடிக்க சதி.! மாநிலத் தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.!

Advertisement