For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேசிய நீர் விருது... டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்...! தமிழக அரசு அறிவிப்பு

The Union Ministry of Jal Shakti has announced that applications can be made for the 6th Water Awards.
06:17 AM Nov 16, 2024 IST | Vignesh
தேசிய நீர் விருது    டிசம்பர் 31 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்     தமிழக அரசு அறிவிப்பு
Advertisement

6வது தேசிய நீர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் நீர் வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் ஆக்கத் துறை 6வது தேசிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. நீர் வள மேலாண்மையில் சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த உள்ளாட்சி அமைப்புகள், சிறந்த பள்ளி/கல்லூரி, சிறந்த நிறுவனம், சிறந்த ஊராட்சி அமைப்பு, சிறந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சிறந்த தொழிற்சாலை மற்றும் சிறந்த சமுதாய அமைப்புகள் ஆகிய ஒன்பது வகைகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

இந்தியாவில் நீர் வள மேலாண்மையில் ஒரு முன்மாதிரியான கலாச்சாராத்தை உருவாக்குவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முறைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் 2018 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நீர் மேலாண்மையில் புதுமையான நடைமுறைகளை செயல்படுத்தும் அனைவரும் பங்கேற்கலாம்.

மேலும் இதற்கான வழிகாட்டி முறைகளை பின்பற்றி 31 டிசம்பர் 2024க்குள் உரிய விவரங்களுடன் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் இது குறித்த விவரங்ளை ராஷ்டிரிய புரஸ்கார் இணையத் தளமான (www.awards.gov.in) என்ற இணைய முகவரியில் அறிந்துகொள்ளலாம். இதில் நீர் பயனீட்டாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு நீர் வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement