வெறும் 7 ரூபாய் சேமித்தால் ரூ.5000 பென்ஷன்.. ஓய்வுக்கு பின்னும் ஜாலி தான்..!! மூத்த குடிமக்களுக்கான சூப்பரான திட்டம்
ஓய்வுபெறும் மூத்த குடி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஓய்வு காலத்துக்கு பிறகும் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்..
இத்திட்டம் 2015-16ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டமாக தொடங்கப்பட்டது. ஊதியம் பெறுபவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை வழங்கும் நோக்கத்துடன் இது ஆரம்பிக்கப்பட்டது. இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கே வழக்கமான வருமானத்தை உறுதி செய்து கொள்ளலாம். இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
நீங்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான மாதாந்திர ஓய்வூதியம் பெற, ஒவ்வொரு மாதமும் உங்கள் விருப்பப்படி ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் 18 – 40 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். தினமும் வெறும் 7 ரூபாய் வீதம் மாதத்திற்கு ரூ. 210 என முதலீடு செய்தாலே போதும் 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்தின் பலனை பெறலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
என்னென்ன தகுதி? இத்திட்டத்தில் கணக்கைத் தொடங்கத் அந்த நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட சரியான வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். முக்கியமாக, விண்ணப்பதாரரிடம் மொபைல் எண் இருக்க வேண்டும். ஏற்கனவே அடல் ஓய்வூதியத்தின் பயனாளியாக இருக்கக் கூடாது. இதில், குறைந்தபட்ச பங்களிப்பு காலம் 20 ஆண்டுகள் ஆகும்.
அரசின் புதிய விதியின்படி, வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. இந்த மாற்றம் அக்டோபர் 1, 2022 முதல் அமல்படுத்தப்பட்டது. அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more ; வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000..? உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!