'நீயா நானா நிகழ்ச்சியில் நடக்கும் உண்மை சம்பவம்..!! இதுதான் அங்கு நடக்கிறது..!! புட்டு வைத்த பிரபலம்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை கடந்த வார எபிசோடில் கலந்து கொண்ட "தவம்" என்கிற பிரபலம் பல விஷயங்களை தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசுகையில், ”நீயா நானா நிகழ்ச்சியில் நாம் வருவதை கன்ஃபார்ம் செய்த உடனேயே சென்னைக்கு வர சொல்லி விடுகிறார்கள். சென்னையில் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கிருந்து நீயா நானா செட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவர்களிடம் கார் மற்றும் வேன் வைத்திருக்கிறார்கள். அதில் நாம் எந்த இடத்தில் நின்று கொண்டு இருந்தாலும் அங்கு வந்து நம்மை அழைத்துச் செல்கின்றனர்.
வடபழனி தாண்டி ஒரு செட் அமைத்திருக்கிறார்கள். அங்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அங்கு தான் ஷூட்டிங் நடைபெறுகிறது. நாங்கள் அங்கு போய்க் கொண்டிருக்கும் போது ஒரு இடத்தில் நீயா நானா நிகழ்ச்சிக்கான சூட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள். மற்றொரு இடத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான செட் அமைக்கப்பட்டு இருந்தது. அதுபோல பல செட் உள்ளே இருக்கிறது. சென்னையில் பல இடங்களில் இருந்து வந்த எங்கள் எல்லோரையும் வேனில் கூட்டிட்டு போயிருந்தார்கள். அங்கு செட்டுக்குள் காலை சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தனர். அதேபோல நாம் சூட்டிங்கு வருவதை உறுதி செய்ததும் நம்மோடு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை கேட்பார்கள்.
நாம் எத்தனை பேரை வேண்டுமானாலும் கூட்டிட்டு போகலாம். நமக்காக சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ரூம் அரேஞ் பண்ணி இருக்கிறார்கள். அங்கு பிரஷ் அப் ஆகி நாமும் நம்மோடு வந்தவர்களும் சாப்பிட போகலாம். அங்கு காலை டிபன் இட்லி, பொங்கல், தோசை என்று விதவிதமாக வைத்திருக்கிறார்கள். பிறகு 10 மணி வாக்கில் செட்டுக்குள் நாம் அமர வைக்கப்படுகிறோம். அங்கு குறைந்தது 8 கேமரா சூட் செய்கிறது. அசிஸ்டன்ட் டைரக்டர் வந்து யார் யார் எங்கே இருக்க வேண்டும் என்பது பற்றி சொல்லி எல்லோரையும் இருக்க வைக்கிறார்கள்.
அதற்குப் பிறகு ஒரு பேப்பரில் எல்லோரிடமும் கையெழுத்து வாங்குவார்கள். அதில் நான் முழு மனதோடு தான் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்பது போன்ற சில விதிமுறைகள் இருக்கும். அதற்கு நாம் கையெழுத்து போட்டு கொடுத்த பிறகு கோபிநாத் அழைக்கப்படுவார். அவர் உள்ளே வந்த பிறகு எல்லோரும் யார் எப்படி எதற்காக நீயா நானா வந்தோம் என்பது பற்றி பேச வேண்டும். பிறகு கோபிநாத் விவாதத்தை தொடங்குவார். இப்படியாக மதியம் வரைக்கும் சூட் போய்க் கொண்டிருக்கிறோம் பிறகு எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ரெஸ்ட் விடுகிறார்கள். சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் சூட்டிங் நடைபெறுகிறது.
ஆனால், எந்த இடத்திலும் நீங்கள் இதுதான் பேச வேண்டும் இதை பேசக்கூடாது என்று யாரும் சொல்லித் தருவதில்லை. எல்லோரும் அவர்கள் விருப்பப்பட்ட படி தான் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு 6 மணிவாக்கில் நிகழ்ச்சி முடிவடைந்து விடும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் அரை மணி நேரம் செட்டுக்குள் இருந்து கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள் எடுக்க ஆசைப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு வரைக்கும் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உறவினர்களிடம் கொடுத்து விட வேண்டும். பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் நம்மை எங்கிருந்து கூப்பிட்டு போனார்களோ அங்கேயே நீயா நானா நிகழ்ச்சியின் வண்டி வந்து நம்மளை இறக்கி விட்டுவிடுவார்கள்.
இப்படித்தான் நான் கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியின் காலை முதல் மாலை வரை இருந்தது என்று பேசிய "தவம்" கடந்த சில வாரங்களுக்கு முன்பு "அதிக சம்பளங்கள் வாங்கும் ஐடி துறையில் இருந்து வெளியே வந்து இயற்கை விவசாயம் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் ஒரு பக்கமும், இவர்கள் எப்படி முடிவு எடுத்தது தவறு என்று பேசுபவர்கள்" இன்னொரு பக்கமும் விவாதித்து இருந்த எபிசோடில் தான் கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : ரயில் பயணிகளின் நீண்ட நாள் ஆசை..!! இனி ஈசியா சீட் கிடைக்கும்..!! புதிய செயலி அறிமுகம்..!!