For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொறி தட்டியது!… ஜெயக்குமார் கொலையில் பல ட்விஸ்ட்!... ஒரே பாணியில் 3 கொலைகள்!

05:59 AM May 12, 2024 IST | Kokila
பொறி தட்டியது … ஜெயக்குமார் கொலையில் பல ட்விஸ்ட்     ஒரே பாணியில் 3 கொலைகள்
Advertisement

Jayakumar murder: முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியுமான ராமஜெயம் கொலையும், ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரியாக உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகித்துள்ளனர்.

Advertisement

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த இரண்டாம் தேதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், நான்காம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக கரைசுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இருந்து அவர் மீட்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தவகையில்,ஜெயக்குமாரின் மாயமான செல்போனை தேடும் முயற்சியில் ஈடுபட்ட போது அவரது வீட்டு கிணற்றிலிருந்து பச்சை நிறத்தில் கத்தியும், ஒரு பாத்திரமும் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும்,வேறு எந்த ஆதாரங்களும் தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில்தான், அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிற்கும், ஜெயகுமாரின் மரணத்திற்கும் தொடர்பு இருக்கும் என்று சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகித்துள்ளனர். கடந்த 2012 ல், மார்ச் 29 ஆம் தேதி அமைச்சர் நேருவின் சகோதரரான ராமஜெயம் நடைப்பயிற்சி சென்றபோது காரில் கடத்தி கொல்லப்பட்டார். ஆனால் தற்போது வரை கொலை செய்யப்பட்டது குறித்த எந்த ஆதாரங்களும் கிடைக்காமல் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராமஜெயம் கடத்தி கொல்லப்பட்டபோது, அவர் கைகளில் டேப் வைத்து சுற்றப்பட்டும், ஜெயக்குமார் கைகளில் கம்பிகளும் சுற்றப்பட்டுள்ளது. ராமஜெயத்தின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகில் எரிந்த நிலை தென்பட்டுள்ளது. ஆகவே, ராமஜெயத்தை கொலை செய்து எரிக்க முயன்றுள்ளனர். ஜெயக்குமாரை எரித்துள்ளனர். ராமஜெயத்தின் வாயில் துணி வைக்கப்பட்டும், ஜெயக்குமாரின் வாயில் பாத்திரம் தேய்க்கும் இரும்பு நார் வைக்கப்பட்டும் இருந்துள்ளது. இவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கையில், இருவரின் மரண பாணியும் ஒன்றாகவும்,இரண்டு மரணத்திலும் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று சந்தேகிக்கின்றனர்.

இதேபோல், ராமஜெயம் கொலையும், கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலன் கொலையும் ஒரே பாணியில் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதாவது, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாரை சேர்ந்த ரவுடி புல்லட் ராஜா, அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரியின் சகோதரர். இவரது மனைவிக்கும் மண்ணச்சநல்லுாரை அடுத்த ஸ்ரீதேவிமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெயபாலுக்கும் ரகசிய சினேகிதம் ஏற்பட்டது.

இதை பல முறை கண்டித்தும் பலனில்லாததால், 2013ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெயபாலை தனது நண்பர்களுடன் மது அருந்த புல்லட்ராஜா அழைத்தார். அதன்படி வந்த ஜெயபாலை மது வாங்கிக் கொடுத்து கொலைச் செய்து அதே பகுதியில் உள்ள காட்டில் புதைத்தது விசாரணையில் தெரிய வந்தது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கச் சென்ற சிறப்பு புலனாய்வு போலீசாரால், 10 ஆண்டுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு வெளிச்சத்துக்கு வந்து அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.

Readmore: அன்னையர் தினம் 2024!… ஆண்டுக்கு 2முறை கொண்டாடுகிறோமா?… பல்வேறு மரபுகள் இதோ!

Advertisement