For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உலகிலேயே மிக கடினமான வேலை எது தெரியுமா.? உயிரை பணயம் வைத்து சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்.!

10:49 AM Feb 14, 2024 IST | 1newsnationuser4
உலகிலேயே மிக கடினமான வேலை எது தெரியுமா   உயிரை பணயம் வைத்து சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்
Advertisement

நம்மில் பலர் ஏசி அலுவலகங்களில் அமர்ந்து வேலை செய்வதை கூட கடினமாக இருப்பதாக கூறுகிறோம். ஆனால் உலகிலேயே கடினமான வேலை எது தெரியுமா? ரஷ்யாவில் செய்யப்படும், 'வைமரோஸ்கா' என்று அழைக்கப்படும் வேலை தான் உலகின் கடினமான வேலையாக கருதப்படுகிறது. இதற்கு 'உரைதல்' என்று பொருள் கூறலாம்.

Advertisement

உலகில் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் செய்யப்படும் என்பதால் இதனை உலகின் கடுமையான வேலை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குளிர்கால மாதங்களில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் பொழுது, லீனா ஆற்றின் கரையில் உள்ள யாகுட்ஸ்க் துறைமுகத்தில் இந்த வேலை செய்யப்படுகிறது. பெரும்பாலும் இந்தப் பணியானது நவம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.

இது கப்பல்களை பழுது பார்க்கும் பணியாகும். குளிர்காலங்களில் யாகுட்ஸ்க் துறைமுகத்தில் கப்பல்கள் நிறுத்தப்படும் போது இது செய்யப்படுகிறது. சைபீரியாவில் கடுமையான குளிர்காலங்களில், கப்பல்களை பராமரிக்கும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். கப்பலை சுற்றி இருக்கும் பனியை குடைந்து கப்பலின் அடிப்பாகத்தை பழுது பார்க்கும் நோக்கத்திற்காகவே இந்த வேலை செய்யப்படுகிறது. பனியை குடையும்போது கவனமும், துல்லியமும் தேவை.

தொழிலாளர்கள் பனிக்கட்டிகளை வேகமாக வெட்டக்கூடாது. சற்று அதிகமாக குடைந்து விட்டால், கீழே இருக்கும் தண்ணீர் மேலே வந்து, அத்தனை மாத உழைப்பும் வீணாகி விடக்கூடும். சில சமயங்களில் தொழிலாளர்கள் மூழ்கி இறக்கும் நிலையும் வரலாம். ஐந்து முதல் ஆறு மாதங்கள் செய்யப்படும் இந்த வேலைக்கு, தொழிலாளி ஒருவருக்கு 6000 முதல் 7000 யூரோக்கள் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

இத்தனை கடினமான வேலை செய்யும் அந்த தொழிலாளர்களோ, இந்த வேலையின் கடினம் என்பது மக்களின் கண்ணோட்டத்தை பொறுத்தது என்று கூறுகிறார்கள். குளிரை தாங்கக் கூடிய வகையில் ஆடையை உடுத்த வேண்டும் என்றும், அதனை களையும் பொழுது உடலில் இருந்து நீராவி வெளியேறும் அளவிற்கு சூடாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

Tags :
Advertisement