For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மொத்த மதிப்பெண் 200தான்,, ஆனால் எடுத்ததோ 212! அது எப்படி திமிங்கலம்? தீயாய் பரவும் மீம்ஸ்..

02:06 PM May 07, 2024 IST | Mari Thangam
மொத்த மதிப்பெண் 200தான்   ஆனால் எடுத்ததோ 212  அது எப்படி திமிங்கலம்  தீயாய் பரவும் மீம்ஸ்
Advertisement

குஜராத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 2 பாடங்களில் 200க்கு 210க்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

குஜராத் மாநிலத்தில் ஆரம்பக் கல்வி முடிவுகள் வெளியாகின. தாஹோத் மாவட்டத்தின் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவியான வன்ஷிபென் மனிஷ்பாய் அவருடைய ரிப்போர்ட் கார்டை பெறுவதற்காக பெற்றோருடன் சென்றுள்ளார்.

அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த வன்ஷிபென் மனிஷ்பாய்-ன் ரிப்போர்ட் கார்டை பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ரிப்போர்ட் கார்டில் இருந்த மார்க், அவர்கள் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அப்படி என்ன அந்த ரிப்போர்ட் கார்டில் என்னதான் இருந்தது என்பது தான் ஆச்சரியம். அதில், கணக்குப் பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 212 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகவும், குஜராத்தி மொழிப்பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 211 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வன்ஷீபனின் பெற்றோர் பள்ளியைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.

அதற்கு, கணக்கீட்டில் ஏற்பட்ட சிறு பிழை காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்பட்ட புதிய மதிப்பெண் பட்டியல் அந்த சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே குளறுபடியுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த மதிப்பெண் பட்டியலை பதிவிட்ட நெட்டிசன்கள் மீம்ஸ்களில் கலாய்த்து வருகின்றனர்.

Tags :
Advertisement