ஆக்ரோஷமாக தாக்கி உடலை எடுத்து சென்ற புலி…! ஜங்கில் சஃபாரியின் போது நடந்த விபரீதம்..!
ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில், வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று புலிகளை காட்டும்போது புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு.
உத்தரகாண்டில் ஜிம் கார்பெட்தேசிய பூங்கா இந்த மாதம் நவம்பர் 15ஆம் தேதி தான் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஜங்கில் சஃபாரி எனப்படும் வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வனப்பகுதியை சுத்தி காட்டிய நிகழ்வு நடந்தது, பின் அவர்கள் திரும்பி வரும்போது திடீரென பதுங்கியிருந்த புலி ஒன்று அந்த பகுதியில் வனத்துறைக்காக பணியாற்றிய நபரை தாக்கி கொன்றுள்ளது. மேலும் கொல்லப்பட்ட நபரின் உடலை இழுத்து சென்றுள்ளது.
புலி தாக்கி உயிரிழந்த நபரின் பெயர் ராமு என்றும், அவருக்கு வயது 60 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியது ஆன் புலி எனவும், தாக்குதலின் போது அது மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாகவும், தாக்குதலை நேரில் பார்த்த மக்கள் கூறுகின்றனர். இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது உயிரிழப்பாக இது மாறியுள்ளது. ஏற்கனவே அந்த சரணாலயத்தின் ஊழியர் ஒருவரை புலி தாக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குளிர்காலத்தில் இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருவர். இந்த பகுதியில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் ஜங்கில் சஃபாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.