For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Election 2024: மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது...!

06:31 AM Apr 12, 2024 IST | Vignesh
election 2024  மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது
Advertisement

2024 பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

மக்களவை பொதுத் தேர்தலில் 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்படும். இதனிடையே, மத்திய பிரதேசத்தில் ஒத்திவைக்கப்பட்ட பெதுல் தொகுதி தேர்தலுக்கான அறிவிப்பும் இன்று வெளியிடப்படும்.

Advertisement

இந்த 94 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலும் 07.05.2024 அன்று நடைபெறும். மத்திய பிரதேசத்தில் 2-வது கட்டமாக நடைபெறவிருந்த பெதுல் தொகுதிக்கான தேர்தல் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை மூன்றாம் கட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகும்.

Tags :
Advertisement