இந்திய தேர்தல் ஆணையர் பதவிக்காலம் 14-ம் தேதியுடன் நிறைவு...! இன்று டெல்லியில் முக்கிய கூட்டம்...!
இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பதவிக்காலம் வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆணையத் தேர்வு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பதவிக்காலம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆணையத் தேர்வு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருந்த நிலையில் சமீபத்தில் அது மாற்றப்பட்டு இது தொடர்பான மசோதா சட்டமாக கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இந்த புதிய சட்டத்தின் கீழ் முதல் முதலாக தேர்வு குழு கூட்டம் நடைபெறுகின்றது.
புதிய சட்டத்தின் படி பிரதமர் தலைமையில் உள்ள தேர்வு குழுவில் பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட மூன்று பேர் குழு தேர்வு செய்யும். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக புதிய தேர்தல் ஆணையர் யார் தேர்ந்தெடுக்கப்பட போகிறார்கள் என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்துள்ளது.