For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாணவனின் காதை துண்டித்த ஆசிரியை..!! கன்னத்தில் ஓங்கி விட்ட தாய்..!! பெரும் பரபரப்பு..!!

11:56 AM Jan 27, 2024 IST | 1newsnationuser6
மாணவனின் காதை துண்டித்த ஆசிரியை     கன்னத்தில் ஓங்கி விட்ட தாய்     பெரும் பரபரப்பு
Advertisement

சென்னை திருவொற்றியூரில் உள்ள அன்சா ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி குகன்யா. இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற மகன் இருக்கிறார். சிறுவன் மித்ரன், ராயபுரத்தில் உள்ள மான்போர்டு தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகம், மாணவன் மனிஷ் மித்ரன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

Advertisement

மேலும், மித்ரனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட குகன்யா பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிகிச்சையில் இருந்த மகன் மனிஷ் மித்ரனின் இடது காது துண்டாகி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவரிடம், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு காதை ஓட்ட வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்.

இதையடுத்து, தனது மகனை தண்டையார்பேட்டையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார். அன்று இரவே மனிஷ் மித்ரனுக்கு அறுவை சிகிச்சை மூலம் காது ஒட்டப்பட்டது. இதையடுத்து, மகனிடம் விசாரித்த பெற்றோருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. மித்ரன் பள்ளியில் விளையாடும் போது அடிபடவில்லை என்றும், வகுப்பு ஆசிரியை நாயகி என்பவர், மித்ரன் வகுப்பறையில் தமிழில் பேசியதன் காரணமாக கண்டித்ததும் அப்போது, ஆசிரியை மித்ரனின் காதை திருகிய போது, அவரது நகம் பட்டு இந்த காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, மித்ரனின் பெற்றோர் ஆசிரியை நாயகி மீது ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், மாணவனின் தாய் குகன்யா தன்னை கன்னத்தில் அறைந்ததாக கூறி ஆசிரியை நாயகி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ராயபுரம் போலீசார், இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement