For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Bigg Boss Tamil Season 8 |ஆரம்பமான பிக்பாஸ் சீசன்.. பல கோடி செலவில் செட்.. போட்டியாளர் இவங்கதான்..!!

The target list of who is going to participate in Bigg Boss Season 8 is out.
01:53 PM Aug 27, 2024 IST | Mari Thangam
bigg boss tamil season 8  ஆரம்பமான பிக்பாஸ் சீசன்   பல கோடி செலவில் செட்   போட்டியாளர் இவங்கதான்
Advertisement

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இம்முறை விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அடுத்த தொகுப்பாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதில், பல நடிகர், நடிகைகளின் பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியாக விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பலரும் சிம்புவை எதிர்பார்க்கின்றனர்.

அதே சமயம், பிக்பாஸ் 8-வது சீசன், அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும், இதற்காக போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீசனில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்களின் உத்தேசப் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், லேட்டஸ்ட்டாக பிக் பாஸ் 8 சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளியான பெயர்களை பற்றி பார்க்கலாம்.

  • யூடியூபர் TTF வாசன்
  • ஷாலின் சோயா ( குக் வித் கோமாளி பிரபம்)
  • ப்ரீத்தி முகுந்தன் (ஸ்டார் ஹீரோயின்)
  • ஜாக்கி ஆனந்தி (RJ)
  • யூடியூபர் வில்ஸ்பட்
  • நடிகர் ரியாஸ் கான்
  • நடிகை பூனம் பஜ்வா
  • சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேர பாடல் பிரபலம்)
  • நடிகர் ஜெகன்
  • நடிகர் ரஞ்சித்
  • குரேஷி (குக் வித் கோமாளி)
  • அருண் பிரசாந்த் (பாரதி கண்ணம்மா)
  • அமலா ஷாஜி (யூடியூபர்)

இவர்களில், டிஎஃப்எஃப் வாசன், அமலா ஷாஜி, ஆகியோர் சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்களை கொண்டிருந்தாலும், ஏற்கனவே அவர்கள் ட்ரோல் செய்யப்பட்டவர்கள். எனவே, இவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறார்களா என்கிற தகவலைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும், கண்டிப்பாக இவர்கள் கலந்துகொண்டால் ‘மீம்ஸ்’ கிரியேட்டர்களுக்கு கண்டடெண்டுக்கு பஞ்சமே இருக்காது எனக் கூறி வருகிறார்கள்.

Read more ; மகளையே திருமணம் செய்து கொண்ட முகலாய அரசர்..!! என்ன காரணம் தெரியுமா?

Tags :
Advertisement